வடசென்னைக்கு ஆபத்து, வருமுன் காப்போம்: கமல் அழைப்பு
- IndiaGlitz, [Friday,October 27 2017]
நடிகர் கமல்ஹாசன் அவ்வப்போது சமூக மற்றும் அரசியல் கருத்துக்களை தனது டுவிட்டரில் கூறி வருவது தெரிந்ததே. இந்த நிலையில் அடுத்த 2 தினங்களுக்குள் வடகிழக்கு பருவமழை தொடங்க வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ள நிலையில் வடசென்னைக்கு மழையால் ஏற்படும் ஆபத்தை தடுக்க வருமுன் காப்போம் என்று அவர் தனது டுவிட்டரில் கூறியுள்ளார்.
எண்ணூர் கழிமுகத்தை உதாசீனப்படுத்தினால் வடசென்னைக்கு ஆபத்து என்றும், தவறு நடந்த பின்னர் அரசை விமர்சிக்காமல் வரும் முன் காக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஆக்கிரமிப்பாளர்களால் சுமார் 1090 ஏக்கர் நிலத்தை இழந்துவிட்டதாக குறிப்பிட்டுள்ள கமல், இதுகுறித்த முழு விபரங்களையும் தனது டுவிட்டரில் பதிவு செய்துள்ளார்
மேலும் சென்னை- காட்டுக்குப்பம், முகத்துவாரக்குப்பம், சிவன்படைவீதி குப்பத்து மீனவ நண்பர்களின் குரலை ஊடகங்கள் தயவாய் உயர்த்த வேண்டும் என்று கூறிய கமல், தனது பதிவிற்கு காட்டுக் குப்பத்து பெண்களும் இளைஞர்களும் நன்றியைப் பதிவு செய்தது தன்னை நெகிழவைத்திருப்பதாகவும், இது தனது உதவியல்ல என்றும் கடமை என்றும் குறிப்பிட்டுள்ளார்.