ரசிகர்களுக்கு கமல் விடுத்த எச்சரிக்கை
Send us your feedback to audioarticles@vaarta.com
சமீபத்தில் நடந்த சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் தினகரன் பெற்ற வெற்றி குறித்து கமல்ஹாசன் தெரிவித்த கருத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கமல்ஹாசனின் இந்த கருத்தை அதிமுக, பாஜக தலைவர்கள் கூட வரவேற்றனர். ஆனால் இந்த கருத்துக்கு தினகரன் கடும் கண்டனம் தெரிவித்ததோடு அவரது ஆதரவாளர்கள் கமல் இந்த கருத்தை திரும்ப பெற வேண்டும் என்று வலியுறுத்தினர்
இந்த நிலையில் கமல்ஹாசனை விமர்சித்த தினகரன் மற்றும் அவரது ஆதரவாளர்களுக்கு எதிராக கமல் ரசிகர்கள் பல்வேறு நகரங்களில் போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்தால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டதாகவும் கூறப்பட்டது
இந்த நிலையில் இதுகுறித்து ரசிகர்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் கமல்ஹாசன் தனது டுவிட்டரில் ஒரு டுவீட்டை பதிவு செய்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: கலந்தாலோசிக்காது நமது இயக்கத்தார் மக்களுக்கும் போக்குவரத்துக்கும் இடைஞ்சலாக ஆர்ப்பாட்டங்களில் இறங்கலாகாது. விதிகளை மதியாத இயக்கத் தொண்டர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் நிலையை தலைமைக்கு தயவாய் ஏற்படுத்தாதீர்கள். ஆக்க பூர்வமான வேலைகள் நிறைய இருக்கின்றன.
கலந்தாலோசிக்காது நமது இயக்கத்தார் மக்களுக்கும் போக்குவரத்துக்கும் இடைஞ்சலாக ஆர்ப்பாட்டங்களில் இறங்கலாகாது. விதிகளை மதியாத இயக்கத் தொண்டர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் நிலையை தலைமைக்கு தயவாய் ஏற்படுத்தாதீர்கள். ஆக்க பூர்வமான வேலைகள் நிறைய இருக்கின்றன.
கலந்தாலோசிக்காது நமது இயக்கத்தார் மக்களுக்கும் போக்குவரத்துக்கும் இடைஞ்சலாக ஆர்ப்பாட்டங்களில் இறங்கலாகாது. விதிகளை மதியாத இயக்கத் தொண்டர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் நிலையை தலைமைக்கு தயவாய் ஏற்படுத்தாதீர்கள். ஆக்க பூர்வமான வேலைகள் நிறைய இருக்கின்றன.
— Kamal Haasan (@ikamalhaasan) January 7, 2018
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Contact at support@indiaglitz.com