பகாசுர ஊழல்பேர்வழிகளை எதிர்க்க பணஉதவி செய்யுங்கள்: உரிமையுடன் கேட்கும் கமல்ஹாசன்
Send us your feedback to audioarticles@vaarta.com
பகாசுர ஊழல் பேர்வழிகளை ஒழிக்க பண உதவி செய்யுங்கள் என மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும் உலகநாயகன் நடிகருமான கமலஹாசன் தனது டுவிட்டர் பக்கத்தில் பொதுமக்களிடம் உரிமையுடன் கேட்டுள்ளார்
மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியை கமல்ஹாசன் கடந்த 2018 ஆம் ஆண்டு தொடங்கினார். அதன்பிறகு அவருடைய கட்சி பாராளுமன்ற தேர்தல், சட்ட மன்ற தேர்தல் மற்றும் ஊரக உள்ளாட்சி தேர்தலை சந்தித்தது. மேலும் இம்மாதம் நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலையும் சந்திக்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் தொடர்ந்து அரசியல் நடத்த, ஊழல் பேர்வழிகளை ஒழிக்க தனக்கு பண உதவி செய்யுமாறு உரிமையுடன் கேட்கிறேன் என கமலஹாசன் சற்று முன் தனது டுவிட்டரில் பதிவு செய்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:
நம்மீது திணிக்கப்பட்டிருக்கும் தரமற்ற அரசியலை மாற்றி, மக்கள்நலனை முன்னிறுத்தும் நேர்மையான அரசியலைச் செய்ய தீவிரமாகக் களத்தில் நிற்கிறோம். பகாசுர ஊழல்பேர்வழிகளை எதிர்த்துப் போராட பணஉதவி செய்யுங்களென உரிமையுடன் உங்களிடம் கேட்கிறேன்.
நம்மீது திணிக்கப்பட்டிருக்கும் தரமற்ற அரசியலை மாற்றி, மக்கள்நலனை முன்னிறுத்தும் நேர்மையான அரசியலைச் செய்ய தீவிரமாகக் களத்தில் நிற்கிறோம். பகாசுர ஊழல்பேர்வழிகளை எதிர்த்துப் போராட பணஉதவி செய்யுங்களென உரிமையுடன் உங்களிடம் கேட்கிறேன். https://t.co/NsgkJ2uRuT#Donate2HonestPolitics pic.twitter.com/TW5VUmwPIx
— Kamal Haasan (@ikamalhaasan) February 2, 2022
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com