close
Choose your channels

இறுதி நாள் படப்பிடிப்பு: விக்ரமுக்கு வாழ்த்து கூறிய கமல்ஹாசன்!

Saturday, June 1, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

உலக நாயகன் கமல்ஹாசன் தயாரிப்பில் விக்ரம், அக்சராஹாசன் நடித்த 'கடாரம் கொண்டான்' படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிந்தது. இருப்பினும் ஒருசில பேட்ச்வொர்க் படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்த நிலையில் அந்த படப்பிடிப்பும் இன்றுடன் முடிந்துவிட்டதால் இந்த படத்தின் ஒட்டுமொத்த படப்பிடிப்பும் தற்போது முடிவுக்கு வந்துள்ளது.

இந்த நிலையில் இன்று இந்த படத்தின் பேட்ச்வொர்க் படப்ப்பிடிப்பு முடிவடைந்ததை அடுத்து படப்பிடிப்பு தளத்திற்கு வந்த தயாரிப்பாளர் கமல்ஹாசன் அவர்கள் விக்ரம், இயக்குனர் ராஜேஷ் செல்வா உள்பட படக்குழுவினர்களுக்கு வாழ்த்து தெரிவித்தார்.

விக்ரம், அக்சராஹாசன், லேனா உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். ஸ்ரீனிவாஸ் குப்தா ஒளிப்பதிவில் ப்ரவீண் படத்தொகுப்பில் உருவாகியுள்ள இந்த படத்தை ராஜ்கமல் இண்டர்நேஷனல் நிறுவனம் தயரித்துள்ளது.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment