அமெரிக்கா, சீனா, துபாய் என உலகம் சுற்றும் கமல்ஹாசன்.. 'பிக்பாஸ்' எப்போது?

  • IndiaGlitz, [Tuesday,September 05 2023]

உலகநாயகன் கமல்ஹாசன் தற்போது அமெரிக்காவில் இருக்கும் நிலையில் அடுத்ததாக அவர் சீனா மற்றும் துபாய் செல்ல இருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் கமல்ஹாசன் சென்னை திரும்பிய பிறகுதான் பிக் பாஸ் ஆரம்பிக்கும் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று கூறப்படுகிறது.

உலகநாயகன் கமல்ஹாசன் சமீபத்தில் அமெரிக்காவுக்கு சென்றார் என்பதும் அங்கிருந்து கொண்டே அவர் ஷாருக்கானின் ’ஜவான்’ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் காணொளி மூலம் கலந்து கொண்டு படக்குழுவினர்களுக்கு வாழ்த்து தெரிவித்தார் என்பதை பார்த்தோம். அதுமட்டுமின்றி கமல்ஹாசன் அமெரிக்காவில் இருக்கும் சில புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றன.

இந்த நிலையில் அமெரிக்க பயணத்தை முடித்துவிட்டு கமல்ஹாசன் சீனா செல்ல இருப்பதாகவும் அதன் பிறகு செப்டம்பர் 16ஆம் தேதி துபாயில் நடைபெறும் Siima திரைப்பட விழாவில் கலந்து கொள்ள இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதனை அடுத்து தான் அவர் துபாயில் இருந்து சென்னை திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கமல்ஹாசன் சென்னை திரும்பிய பிறகு பிக்பாஸ் தமிழ் சீசன் 7 தொடங்கும் தேதி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More News

எனக்கு அஜித் தான் ஆசிரியர்.. ஆசிரியர் தின விழா வாழ்த்து கூறிய பிரபல நடிகர்..!

எனக்கு அஜித் தான் ஆசிரியர் என ஆசிரியர் தினமான இன்று பிரபல நடிகர் ஒருவர் தனது சமூக வலைதள பக்கத்தில் ஆசிரியர்களுக்கு வாழ்த்து தெரிவித்து நெகிழ்ச்சியுடன் பதிவு செய்துள்ளார்

படப்பிடிப்பில் விபத்து.. 'மாரி 2' நடிகருக்கு என்ன ஆச்சு? ரசிகர்கள் அதிர்ச்சி..!

பிரபல மலையாள நடிகர் டோவினோ தாமஸ் படப்பிடிப்பில் கலந்து கொண்டிருந்த போது விபத்துக்குள்ளானதை அடுத்து அவர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

100 குடும்பத்திற்கு தலா ஒரு லட்சம்.. திரைப்படம் வெற்றியால் ரூ.1 கோடி உதவித்தொகை அறிவித்த நடிகர்..!

இந்த நிலையில் சமீபத்தில் 'குஷி' திரைப்படத்தின் வெற்றி விழாவில் கலந்து கொண்ட விஜய் தேவரகொண்டா, தனக்கு 'குஷி' திரைப்படத்தில் கிடைத்த சம்பளத்திலிருந்து ஒரு கோடி ரூபாய்  100 குடும்பங்களுக்கு தலா ஒரு லட்ச

மீண்டும் இணையும் “காவல்துறை உங்கள் நண்பன்” டீம்.. விறுவிறுப்பான படப்பிடிப்பு..!

பிஆர் டாக்கீஸ் கார்ப்பரேசன் சார்பில் பாஸ்கரன் ,  ராஜபாண்டியன் இணைந்து  தயாரித்து சுரேஷ் ரவி, யோகி பாபு நடிக்கும் புதிய திரைப்படம் இனிதே துவங்கியது !!

ரஜினி, நெல்சனை அடுத்து அனிருத்துக்கும் கிஃப்ட் கொடுத்த கலாநிதி மாறன்.. வைரல் புகைப்படம்..!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'ஜெயிலர்' திரைப்படம் கடந்த மாதம் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பதும் இந்த படம் கிட்டத்தட்ட 600 கோடி ரூபாய் வசூல் செய்ததாகவும் கூறப்பட்டது.