close
Choose your channels

அவர் எங்களை விட்டு செல்லவில்லை.. இன்னும் இருக்கிறார்.. பாலசந்தர் பிறந்த நாளில் கமல் வெளியிட்ட வீடியோ..!

Tuesday, July 9, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

இன்று இயக்குனர் சிகரம் பாலச்சந்தர் பிறந்த நாள் கொண்டாடப்பட்டு வரும் நிலையில் கமல்ஹாசன் தனது சமூக வலைதளத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் அவர் கூறியிருப்பதாவது:

திரு பாலச்சந்தர் அவர்களை பற்றி ஒரு குறிப்பிட்ட நாளில் தான் பேச வேண்டும் என்று எனக்கு அப்படி எதுவும் இல்லை, ஒரு தேதியை குறித்து வைத்துக் கொண்டு அவரை பேச வேண்டும் என்று அவசியம் இல்லை, அவரைப் பற்றி நான் பேசாத நாளில்லை என்பது என்னை தெரிந்தவர்களுக்கு தெரியும்.

என்னை பொறுத்தவரை பாலச்சந்தர் அவர்கள் எனக்கு என் வாழ்வில் சிறப்பான ஒரு இடத்தை தந்தார் என்பது மட்டுமின்றி என்னை போல் பல நடிகர்களை பல நட்சத்திரங்களை அவர் அறிமுகப்படுத்தியுள்ளார்.

விடாமுயற்சி, புதுமைகள், புதுமுகங்களை அறிமுகப்படுத்திய வேறு எந்த இயக்குனரும் அவரை போல் இல்லை. நானும் இந்த திரையுலகில் 60 வருடங்களாக இருக்கின்றேன், அப்படி பார்க்கும்போது என்னுடன் சம்பந்தப்படாமல் அவர் இருந்திருந்தாலும் நான் அவரை போற்றுவேன்.

என் வாழ்வில், என்னை போன்ற பலரின் வாழ்வில், அவர் செய்திருக்கும் மாற்றங்கள் மறக்க முடியாதது. என்னுடைய நடிப்புலக வாழ்க்கை ,என்னுடைய கட்டுப்பாடுகளுடன் செயல்படும் தன்மை எல்லாமே அவரிடமிருந்து நான் கற்றுக் கொண்டது தான்.

என்னைப்போல் நிறைய நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களும் இதைச் சொல்வார்கள், எங்களை விட்டு அவர் போய்விட்டார் என்று சொல்ல கூட எங்களுக்கு வாய் கூசுகிறது, எங்களுடன் இருக்கிறார், அவர் வாழ்க என்று கமல்ஹாசன் புகழாரம் சூட்டியுள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment