கமல்ஹாசனின் இரண்டு பரபரப்பான டுவிட்டுக்கள்!
Send us your feedback to audioarticles@vaarta.com
உலக நாயகன் கமல்ஹாசன் திரையுலகம், அரசியல் என இரண்டிலும் பிசியாக இருந்து கொண்டிருந்தாலும் சமூக வலைத்தளங்களில் அவ்வப்போது தனது கருத்துக்களை ஆக்ரோஷமாக தெரிவித்து வருபவர் என்பது தெரிந்ததே
அந்த வகையில் அவர் இன்று இரண்டு டுவீட்டுக்களை பதிவு செய்துள்ளார். அதில் காந்தியின் நினைவுநாளான இன்றைய தினம் குறித்து, ‘தேசபக்தி கொண்ட இந்தியரால் மகாத்மா காந்தி கொல்லப்பட்டார். இந்த சம்பவம் மீண்டும் நிகழக்கூடாது என்பதற்காக காந்தியை இந்தியா நினைவில் கொள்கிறது. சீர்திருத்தப்பட்ட உலகில் விமர்சனத்திற்காக மலிவான எதிர்ப்பின் வடிவம் படுகொலை ஆகும் என கமல் தெரிவித்துள்ளார்.
மேலும் ஒரு டுவீட்டில் ’ஆட்சி அதிகாரத்தின் உயர் மட்டத்திலிருந்து கீழ் மட்டம் வரை ஊழல் பரவியிருப்பதை இந்த “தேர்வாணைய மோசடி” பறைசாற்றுகிறது. மேலும் கீழுமாய் புரையோடியிருக்கும் ஊழலுக்கு நடுவிலே, நெஞ்சுரத்தோடு நேர்மையை கடைப்பிடிக்கும் மிகச்சிலருக்கு... நம்பிக்கையை விடாதீர்கள். நாளை நமதே’ என குறிப்பிட்டுள்ளார்.
மேற்கண்ட இரண்டு டுவீட்டுக்களும் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
ஆட்சி அதிகாரத்தின் உயர் மட்டத்திலிருந்து கீழ் மட்டம் வரை ஊழல் பரவியிருப்பதை இந்த “தேர்வாணைய மோசடி” பறைசாற்றுகிறது.
— Kamal Haasan (@ikamalhaasan) January 30, 2020
மேலும் கீழுமாய் புரையோடியிருக்கும் ஊழலுக்கு நடுவிலே, நெஞ்சுரத்தோடு நேர்மையை கடைப்பிடிக்கும் மிகச்சிலருக்கு... நம்பிக்கையை விடாதீர்கள்.
நாளை நமதே.
மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து, தமிழுக்கு உரிய மரியாதை கொடுக்க முடிவெடுத்திருப்பதை மெச்சினோம்.
— Kamal Haasan (@ikamalhaasan) January 30, 2020
மக்களுக்குப் புரியும் எந்த மொழியும், சர்வ வல்லமையுமுள்ள கடவுளுக்கும் புரிந்தே ஆகவேண்டும்.
The lowest & meanest form of criticism in a reformed world is assasination. One of the most important ambassador of world peace and my personal torchbearer was shot dead by an allegedly patriotic Indian on this day. India remembers Gandhiji so that the history is not repeated.
— Kamal Haasan (@ikamalhaasan) January 30, 2020
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com