TNPSCயா? TNPPSCயா? கமல்ஹாசனின் நச் டுவீட்

  • IndiaGlitz, [Saturday,February 01 2020]

டிஎன்பிஎஸ்சி தேர்வில் முறைகேடு நடந்ததாக சமீபத்தில் தலைப்புச் செய்திகளில் செய்திகள் வெளியாகி தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. டிஎன்பிஎஸ்சி தேர்வுயே கேள்விக்குறியாக்கிய சில அரசு அதிகாரிகளின் செயலால் அந்த தேர்வின் நம்பகத்தன்மையை சந்தேகப்படும் வகையில் உள்ளதாக சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்

இந்த நிலையில் நடிகரும் மக்கள் நீதி மையம் கட்சி தலைவருமான கமல்ஹாசன் அவர்கள் இந்த தேர்வில் நடந்த ஊழல் குறித்து தனது சமூக வலைதளப் பக்கத்தில் கூறியதாவது:

NPSC இப்போது TNPPSC (Thamizh Nadu Pre-Paid Service Commission) ஆகி இருக்கிறது. முன் புரோக்கர்களிடம் கொடுத்து, பின் அரசிடம் சம்பளமாக பெறும் முறை தான் Group 1 முதல் Group 4 வரை நடக்கும் என்றால் 5ஆம் வகுப்புக்கும், 8ஆம் வகுப்புக்கும் பொதுத்தேர்வு எதற்கு? தகுதித்தேர்வுகள் எதற்கு?

கமல்ஹாசனின் இந்த கேள்விக்கு நெட்டிசன்கள் பெரும் வரவேற்பு அளித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது

More News

அல்வாவில் தொடங்கி அல்வாவில் முடிந்த பட்ஜெட்: கமல் கருத்து

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் இன்று 2020 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை பாராளுமன்றத்தில் தாக்கல் செய்தார். ஏறக்குறைய மூன்று மணி நேரம் அவர் தாக்கல்

ஒரே நாளில் பி.எஸ்.என்.எல்லில் இருந்து வெளியேறும் 80,000 ஊழியர்கள்..! இந்தியாவிலேயே முதல்முறை.

எம்.டி.என்.எல் நிறுவனத்திலிருந்தும் 14,378 ஊழியர்கள் விருப்ப ஓய்வு பெறுகின்றனர். பி.எஸ்.என்.எல் மற்றும் எம்.டி.என்.எல் நிறுவனங்கள் ரூ.40.000 கோடி கடன் வைத்துள்ளன

இந்தியச் சுற்றுச்சூழல் ஆய்வாளர் பவன் சுகதேவிற்கு நோபால் பரிசான  “டைலர் விருது”

சுற்றுச்சூழல் துறையில் நோபால் பரிசான “டைலர் விருது” இந்தியாவைச் சேர்ந்த சுற்றுச்சூழல் ஆராய்ச்சியாளர் பவன் சுகதேவ் அவர்களுக்கு அறிவிக்கப் பட்டுள்ளது.

தனியாருக்கு விற்கப்படும் LIC,IDBI பங்குகள்.. குறையும் தனிநபர் வருமான வரி..! மத்திய பட்ஜெட் 2020.

நாடாளுமன்றத்தில் இன்று தனது இரண்டாவது பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்.

நண்பனின் திருமணத்திற்கு சென்று வாழ்த்து கூறிய சிம்பு!

அஜித்தின் மங்காத்தா, விஜய்யின் ஜில்லா உள்பட ஒருசில திரைப்படங்களில் நடித்தவரும் பிக்பாஸ் 2 போட்டியாளர்களில் ஒருவருமான