நான் சங்கியா...? கமல்ஹாசன் ஆவேசம்

  • IndiaGlitz, [Monday,December 07 2020]

சமீபத்தில் உலகநாயகன் நடிகரும் மக்கள் நீதி மையம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் அவர்கள் அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பாவுக்கு ஆதரவாக வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார்

இந்த வீடியோ மிகப்பெரிய அளவில் வைரலானது என்பதும், தனக்கு ஆதரவு தெரிவித்த கமல்ஹாசனுக்கு நன்றி என சூரப்பா தெரிவித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இருப்பினும் இந்த வீடியோ குறித்து சமூக வலைத்தளங்களில் ஒருசில நெட்டிசன்கள் அடித்த கமெண்ட்டில் கமலஹாசன் அவர்கள் பாஜகவின் ’பி’ டீம் என கேலியும் கிண்டலும் செய்தனர்

இந்த விமர்சனத்துக்கு அவ்வப்போது மக்கள் நீதி மய்யம் கட்சியின் தொண்டர்கள் பதிலடி கொடுத்து வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் கமல்ஹாசன் தனது டுவிட்டரில் இதற்கு பதிலடி கொடுத்துள்ளார். அவர் இதுகுறித்து கூறியதாவது:

அறத்தின் பக்கம் நிற்பவனைப் பார்த்து சங்கி, பி டீம் என்கிறவர்களின் நோக்கம் ஊழலைப் போற்றுவது. வாழ்நாள் முழுக்க தமிழகத்தைச் சுரண்டித் தின்பவர்கள், ஊழல் தொழிலுக்கு ஆபத்து வருகையில் ஒன்றிணைந்து கொள்வதில் ஆச்சர்யமில்லை. திஹாரையும் பரப்பன அக்ரஹாரத்தையும் நிரப்பினவர்கள் அல்லவா? தன் வாழ்க்கையே, தன் செய்தி என வாழ்ந்து காட்டிய காந்திக்குத்தான் நான் பி டீம். ஆறு வயதிலிருந்தே நான் ஏ டீம் என்பதை ஏ1 ஊழல் புத்திரர்களுக்கு உறைக்கும்படி சொல்கிறேன்

நெட்டிசன்களுக்கு பதிலடி கொடுத்த கமல்ஹாசனின் இந்த டுவீட் தற்போது வைரலாகி வருகிறது

More News

கொரோனாவால் பாதிக்கப்பட்ட டிவி சீரியல் நடிகை உயிரிழப்பு: அதிர்ச்சியில் சின்னத்திரை!

கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த டிவி சீரியல் நடிகை ஒருவர் இன்று அதிகாலை உயிரிழந்ததை அடுத்து சின்னத் திரை உலகம் கடும் அதிர்ச்சியில் உள்ளது 

கொரோனாவை வெறும் 24 மணிநேரத்தில் குணப்படுத்த முடியுமா??? அசத்தும் விஞ்ஞானிகள்!!!

கொரோனா பரவல் கடந்த டிசம்பர் மாத இறுதியில் புதிதாகக் கண்டுபிடிக்கப் பட்டது. கடந்த 11 மாதத்தில் அதன் பாதிப்பு எண்ணிக்கை உலகம் முழுவதும் 6 கோடியைத் தாண்டி அதிகரித்துக் கொண்டே போகிறது.

மிக்சர் பார்ட்டிகளை பாதுகாப்பது தான் பிக்பாஸ் நிகழ்ச்சியா? தமிழ் நடிகை ஆவேசம்

மிக்சர் பார்ட்டிகளையும், கம்பெனி ஆர்ட்டிஸ்ட்களையும் பாதுகாப்பதுதான் பிக்பாஸ் நிகழ்ச்சியா? என தமிழ் நடிகையும் முன்னாள் பிக்பாஸ் போட்டியாளர்களில் ஒருவருமான  கஸ்தூரி தனது சமூக வலைத்தளத்தில்

அர்ச்சனா குரூப்பின் ஆதிக்கம்: பாலாஜி சொன்னதை லேட்டாக புரிந்து கொண்ட ஆரி!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் நேற்று சனம்ஷெட்டி வெளியேறியது அர்ச்சனா குரூப்புக்கு இன்னொரு வெற்றியாகத்தான் பார்க்கப்படுகிறது என்பதும், அந்த குரூப்பில் உள்ள ஏழு பேர்களும் அப்படியே தொடர்ச்சியாக ஒவ்வொரு வாரமும்

சன் பிக்சர்ஸ் அடுத்த படத்தில் விஜய்சேதுபதி? பிரபல இயக்குனருடன் பேச்சுவார்த்தை!

நடிகர் சிவகார்த்திகேயன் நடித்த 'வருத்தப்படாத வாலிபர் சங்கம்' 'ரஜினிமுருகன்' போன்ற படங்களை இயக்கியவர் இயக்குனர் பொன்ராம். இவர் தற்போது 'எம்ஜிஆர் மகன்'