ஏலம் போட்டு தமிழ்நாட்டை விற்பவர்களுக்கும் விரைவில் 'பரிசு': கமல்ஹாசன்
- IndiaGlitz, [Tuesday,October 13 2020]
2020 ஆம் ஆண்டு பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு அறிவிப்பு நேற்று அறிவிக்கப்பட்டது என்பதும், பால் மில்க்ரோம், ராபர்ட் வில்சன் ஆகிய இரண்டு அமெரிக்கர்களுக்கு பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது என்பதும் தெரிந்ததே. இந்த இரு அமெரிக்கர்களும் புதிய ஏல முறைகள் கண்டுபிடிப்புக்காக நோபல் பரிசு வழங்கப்படுகிறது
இந்த நிலையில் இந்த அறிவிப்பை அடுத்து கமல்ஹாசன் தனது டுவிட்டரில் ஒரு டுவிட்டை பதிவு செய்துள்ளார். அதில், ‘ஏலமிடும் முறையை ஆய்வு செய்த இரு அமெரிக்க அறிஞர் பெருமக்களுக்கு நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. ஏலம் போட்டு தமிழ்நாட்டை விற்பவர்களுக்கும் விரைவில் 'பரிசு' காத்திருக்கிறது. நாளை நமதே! என்று குறிப்பிட்டுள்ளார்.
கமல்ஹாசனின் இந்த டுவிட்டுக்கு வழக்கம்போல் ஆதரவு மற்றும் எதிர்ப்பு கமெண்ட்டுக்கள் நெட்டிசன்களிடம் இருந்து பதிவாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது,
ஏலமிடும் முறையை ஆய்வு செய்த இரு அமெரிக்க அறிஞர் பெருமக்களுக்கு நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.
— Kamal Haasan (@ikamalhaasan) October 13, 2020
ஏலம் போட்டு தமிழ்நாட்டை விற்பவர்களுக்கும் விரைவில் 'பரிசு' காத்திருக்கிறது.
நாளை நமதே!