கொரோனாவால் உயிரிழந்த தொண்டருக்கு கமல் இரங்கல்
Send us your feedback to audioarticles@vaarta.com
கொரோனா வைரஸ் காரணமாக நாடு முழுவதும் பலியானவர்களின் எண்ணிக்கையும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே வருவதால் பெரும் பதட்டம் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக தமிழகத்தின் தலைநகர் சென்னையில் தினந்தோறும் பலியானவர்களின் எண்ணிக்கையும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் பல மடங்கு அதிகரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் கொரோனாவால் பலியான தனது கட்சியின் தொண்டருக்கு மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும் உலகநாயகன் நடிகருமான கமலஹாசன் அவர்கள் இரங்கல் தெரிவித்து வீடியோ ஒன்றை தனது சமூக வலைதளப் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். அதில் அவர் கூறியதாவது:
எந்த பதவியும் நாடாமல், நற்பணிக்காக நம்முடன் இணைந்த தோழர் திரு.திலக் அவர்கள் நம் அடையாளம். நம் மய்யத்தின் அடிநாதம். கொரோனா கொள்ளை நோய் தாக்கி உயிரிழந்த நம் உறவின் உறவுகளுக்கு நம் அன்பும், அனுதாபங்களும். திலக், தொண்டனாகவே வாழ்ந்தார், தொண்டனாகவே மறைந்தார். நற்சேவை நாயகா...நன்றி.
எந்த பதவியும் நாடாமல், நற்பணிக்காக நம்முடன் இணைந்த தோழர் திரு.திலக் அவர்கள் நம் அடையாளம்.
— Kamal Haasan (@ikamalhaasan) June 10, 2020
நம் மய்யத்தின் அடிநாதம். கொரோனா கொள்ளை நோய் தாக்கி உயிரிழந்த நம் உறவின் உறவுகளுக்கு நம் அன்பும், அனுதாபங்களும்.
நற்சேவை நாயகா...நன்றி. pic.twitter.com/x2DZD35TTv
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com