எதற்கும் அஞ்சாத துணிச்சல் உடையவர் விஜயகாந்த்: கமல்ஹாசன் இரங்கல்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
தேமுதிக தலைவர் விஜயகாந்த் இன்று காலை காலமான நிலையில் அவருக்கு திரையுலக பிரபலங்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் சற்றுமுன் விஜயகாந்த் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தி பிரேமலதா மற்றும் அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.
இந்த நிலையில் உலக நாயகன் கமல்ஹாசன் தனது சமூக வலைத்தளத்தில் தனது நண்பர் விஜயகாந்த் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் இது குறித்து கூறியிருப்பதாவது:
எனது அன்பிற்கினிய சகோதரர், தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் நிறுவனத் தலைவர், தமிழ் சினிமாவின் தனித்துவம் மிக்க நடிகர், கேப்டன் என்று அனைவராலும் அன்பு பாராட்டப்பட்ட விஜயகாந்த் அவர்களின் மறைவுச் செய்தி மிகுந்த துயரத்தைத் தருகிறது.
தன் ஒவ்வொரு செயலிலும் மனிதநேயத்தை கடைப்பிடித்து வாழ்ந்தவர். தமிழ்நாட்டு அரசியல் வெளியில் புது திசையிலான நம்பிக்கையை உருவாக்கியவர். எளியோருக்கு நீளும் உதவிக்கரம் கொண்டிருந்தவர். எதற்கும் அஞ்சாத துணிச்சல் அவரது அடையாளமாக இருந்தது. சினிமா, அரசியல் இரண்டு தளங்களிலுமே தடம் பதித்த புரட்சிக் கலைஞர் விஜயகாந்த் நம் நினைவுகளில் என்றென்றும் நிலைத்திருப்பார்.
அவரது பிரிவால் வருந்தும் குடும்பத்தார், தொண்டர்கள், ரசிகர்கள் அனைவருக்கும் என் உளப்பூர்வமான ஆறுதல்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
எனது அன்பிற்கினிய சகோதரர், தேசிய முற்போக்குத் திராவிட கழகத்தின் நிறுவனத் தலைவர், தமிழ் சினிமாவின் தனித்துவம் மிக்க நடிகர், கேப்டன் என்று அனைவராலும் அன்பு பாராட்டப்பட்ட விஜயகாந்த் அவர்களின் மறைவுச் செய்தி மிகுந்த துயரத்தைத் தருகிறது.
— Kamal Haasan (@ikamalhaasan) December 28, 2023
தன் ஒவ்வொரு செயலிலும் மனிதநேயத்தைக்…
Immerse Yourself in the Melodies of Vijayakanth!
Dive into the soulful tunes and timeless classics by Vijayakanth. Click the link below to access a curated compilation of his greatest hits!
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments