தம்பியை வரவேற்கிறேன்: 'இந்தியன் 2' படத்தின் நள்ளிரவு அறிவிப்புக்கு பின் கமல் டுவிட்!
Send us your feedback to audioarticles@vaarta.com
‘இந்தியன் 2’ படம் குறித்த முக்கிய அறிவிப்பு நேற்று நள்ளிரவு வெளியான நிலையில் இந்த அறிவிப்புக்கு பின் தம்பி உதயநிதி ஸ்டாலினை வரவேற்கிறேன் என உலக நாயகன் கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்து உள்ளார்.
கமல்ஹாசன் நடிப்பில், ஷங்கர் இயக்கத்தில், லைகா நிறுவனத்தின் சுபாஸ்கரன் தயாரிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வந்த திரைப்படம் ‘இந்தியன் 2’. இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில ஆண்டுகளாக நடைபெறாமல் இருந்த நிலையில் தற்போது மீண்டும் செப்டம்பரில் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்க உள்ளதாக தகவல்கள் வெளியானது.
இந்நிலையில் இந்த படத்தை லைகா நிறுவனம் தயாரித்து வந்த நிலையில் தற்போது ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் இந்த படத்தை பெற்றுள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து கமல்ஹாசன் தனது டுவிட்டர் பக்கத்தில் ‘இந்தியன் 2’ படத்தில் தம்பி உதயநிதி ஸ்டாலினை வரவேற்கிறேன் என்று பதிவு செய்து செப்டம்பர் முதல் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்று தெரிவித்துள்ளார்.
மேலும் ‘இந்தியன் 2’ படத்தின் அட்டகாசமான புதிய போஸ்டர் வெளியாகி உள்ள நிலையில் இந்த போஸ்டர் தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
Filming for #Indian2 from September. Wishing team @shankarshanmugh , #Subaskaran , @LycaProductions and everyone else involved a successful journey.
— Kamal Haasan (@ikamalhaasan) August 23, 2022
Welcome onboard thambi @Udhaystalin @RedGiantMovies_ https://t.co/iCbBZFX8X4 pic.twitter.com/uKInYMy15W
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments