விவேக்கின் மரணம் தமிழ்ச் சமூகத்திற்கு ஏற்பட்ட பேரிழப்பு: கமல்ஹாசன்
Send us your feedback to audioarticles@vaarta.com
நகைச்சுவை நடிகர் விவேக் இன்று அதிகாலை உடல்நலக் கோளாறு காரணமாக காலமான நிலையில் அவருக்கு திரையுலக பிரபலங்கள், அரசியல் கட்சி தலைவர்கள் உள்பட பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன், சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் உள்பட அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்
அந்த வகையில் தற்போது உலக நாயகன் நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமலஹாசன் அவர்கள் தனது டுவிட்டரில் விவேக் மறைவு குறித்து கூறியிருப்பதாவது: நடிகனின் கடமை நடிப்பதோடு முடிந்தது என்று இருந்துவிடாமல் தனக்குச் செய்த சமூகத்துக்கு தானும் ஏதேனும் செய்ய விரும்பியவர், செய்தவர் நண்பர் விவேக். மேதகு கலாமின் இளவலாக, பசுமைக் காவலராக வலம் வந்த விவேக்கின் மரணம் தமிழ்ச் சமூகத்திற்கு ஏற்பட்ட பேரிழப்பு என்று கூறியுள்ளார்.
கமல்ஹாசன் மற்றும் விவேக் ஆகிய இருவரும் பாலச்சந்தரின் பள்ளியில் இருந்து வந்தாலும் இருவரும் இன்னும் ஒரு படத்தில் கூட இணைந்து நடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் தற்போது உருவாகி வரும் ’இந்தியன் 2’ என்ற திரைப்படத்தில் இருவரும் முதல்முறையாக இணைந்து நடித்து வந்த நிலையில் இந்த திரைப்படம் ரிலீஸ் ஆகும் முன்னரே விவேக் மறைந்து விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
நடிகனின் கடமை நடிப்பதோடு முடிந்தது என்று இருந்துவிடாமல் தனக்குச் செய்த சமூகத்துக்கு தானும் ஏதேனும் செய்ய விரும்பியவர், செய்தவர் நண்பர் விவேக். மேதகு கலாமின் இளவலாக, பசுமைக் காவலராக வலம் வந்த விவேக்கின் மரணம் தமிழ்ச் சமூகத்திற்கு ஏற்பட்ட பேரிழப்பு.
— Kamal Haasan (@ikamalhaasan) April 17, 2021
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments