close
Choose your channels

விஸ்வரூபம் 2: ராணுவ உடையில் பாரத தாய்க்கு சலாம் போட்ட கமல்

Friday, December 1, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கடந்த 2013ஆம் ஆண்டு வெளிவந்த கமல்ஹாசனின் 'விஸ்வரூபம்' தடைகள் பல கடந்து உலகம் முழுவதும் சூப்பர் ஹிட் ஆகியதோடு, ரூ.100 கோடி வசூல் கிளப்பிலும் இணைந்தது. இந்த நிலையில் இந்த படத்தின் முதல் பாகத்தின் படப்பிடிப்பின்போது இரண்டாம் பாதியின் பெரும்பாலான காட்சிகள் படமாக்கப்பட்டபோதிலும், 'விஸ்வரூபம் 2' பல்வேறு காரணங்களால் படப்பிடிப்பு முடிவடைய தாமதம் ஆனது.

இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன் மீண்டும் விஸ்வரூபம் 2' படப்பிடிப்பை தொடங்கிய கமல்ஹாசன், தற்போது இறுதிக்கட்ட படப்பிடிப்பை தொடங்கியுள்ளார். இதுகுறித்து அவர் தற்போது சமூக வலைத்தளங்களிலும் பதிவு செய்துள்ளார்.

கமல்ஹாசன் தனது சமூக வலைத்தளத்தில் 'விஸ்வரூபம் 2' குறித்து கூறியதாவது: 'விஸ்வரூபம் 2' மற்றும் 'விஸ்வரூப் 2' என தமிழ் மற்றும் இந்தி பதிப்புகளுக்கான இறுதிக்கட்ட படப்பிடிப்புகள் நடைபெற்று வருகின்றன. இந்தியாவில் இருக்கும் ஒரே பெண் ராணுவ அதிகாரிகளுக்கான பயிற்சி மையமான சென்னை ராணுவ அதிகாரிகள் பயிற்சி மையத்தில் நானும் எனது படக்குழுவினர்களும் படப்பிடிப்பில் ஈடுபட்டுள்ளோம். இந்த பெருமைக்குரிய இடத்தில் படப்பிடிப்பு நடத்துவதில் பெருமையடைகிறோம். பெண்கள் அனைவருக்கும் நான் தலைவணங்குகிறேன், குறிப்பாக எனக்கு மிகவும் பிடித்த எனது பாரதத் தாய்க்கு. மா துஜே சலாம்’ என்று கமல் பதிவு செய்துள்ளார்.

மேலும் அவர் பதிவு செய்துள்ள புகைப்படத்தில் கமல், ஆண்ட்ரியா உள்ளிட்ட பலர் ராணுவ உடையில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படம் வரும் ஜனவரி 26ஆம் தேதி வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment