நண்பனாய் மாறுவேடம் பூண்டு வந்த என் குருக்களில் ஒருவர்: கமல்ஹாசன்
- IndiaGlitz, [Sunday,September 27 2020]
தமிழ் சினிமாவின் சார்லி சாப்ளின் என்று புகழக்கூடிய பழம்பெரும் நகைச்சுவை நடிகர் நாகேஷ் அவர்களின் பிறந்த நாளை இன்று திரையுலகம் கொண்டாடி வருகிறது
எம்ஜிஆர்-சிவாஜி கணேசன், ரஜினி-கமல், அஜீத்-விஜய் என மூன்று தலைமுறை நாயகர்களுடன் நடித்த நாகேஷ் அவர்கள் ஆயிரத்துக்கும் மேற்பட்ட படங்களில் நடித்து பல்வேறு சாதனைகள் செய்துள்ளார். நகைச்சுவை நடிகராக மட்டுமின்றி கதாநாயகனாகவும், குணசித்திர நடிகராகவும் வில்லனாகவும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடதக்கது
அவருடைய பிறந்தநாளான செப்டம்பர் 27-ம் தேதியான இன்று திரையுலகினர் கொண்டாடி வருகின்றனர் இந்த நிலையில் நாகேஷ் உடன் மிகவும் நெருக்கமான நட்பை கொண்டவரும் நாகேஷை தனது மானசீக குருவாக நினைத்து வருபவருமான கமல்ஹாசன் அவர்கள் நாகேஷ் குறித்து தனது டுவிட்டரில் கூறியதாவது:
நாகேஷ் அய்யா... உம்மை நினைக்காத நாட்கள் மிகச்சிலவே. பல தலைமுறைகளை மகிழ்வித்த வித்தகர். அந்த ரசிகர் கூட்டத்தில் நானும் உட்படுவேன். நண்பனாய் மாறுவேடம் பூண்டு வந்த என் குருக்களில் அவரும் ஒருவர். என் கலை மரபணுவில் அவரும் வாழ்கிறார்.
நாகேஷ் அய்யா... உம்மை நினைக்காத நாட்கள் மிகச்சிலவே. பல தலைமுறைகளை மகிழ்வித்த வித்தகர். அந்த ரசிகர் கூட்டத்தில் நானும் உட்படுவேன். நண்பனாய் மாறுவேடம் பூண்டு வந்த என் குருக்களில் அவரும் ஒருவர்.
— Kamal Haasan (@ikamalhaasan) September 27, 2020
என் கலை மரபணுவில் அவரும் வாழ்கிறார்.