பசிக்கு மதமில்லை, விவசாயிகள் ஒன்றுகூட கமல் அழைப்பு
- IndiaGlitz, [Tuesday,November 14 2017]
கமல்ஹாசனின் அரசியல் பாதை வித்தியாசமானது என்பதை அவரது நடவடிக்கைகளை கூர்ந்து கவனிப்பவர்களுக்கு தெரியவரும். குறிப்பாக விவசாயிகள் மீது மிகுந்த அக்கறை கொண்டவர் கமல்ஹாசன். சமீபத்தில் விவசாய சங்கத்தின் கூட்டத்தில் கலந்து கொண்ட கமல், விவசாயத்தை இண்டஸ்ட்ரியாக மாற்ற வேண்டும் என்று அழுத்தமாக குரல் கொடுத்தார்.
இந்த நிலையில் அகில இந்திய விவசாயிகள், கட்சிகளைக் கடந்து கூடுவதில் மகிழ்ச்சி என்றும் இதுவரை சேராதிருப்பவர்கள் உடனடியாக ஒன்று சேர வேண்டும் என்றும் அவர் அழுத்தமாக கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது: அகில இந்திய விவசாயிகள் கட்சி, வரை கடந்து கூடுவதில் மகிழ்ச்சி. இனியும் சேராதிருப்போர் சேர்க. இது மிக முக்கியமான மக்கள் குரல். பசிக்கு மதமில்லை. பசிக்கு பதில் விவசாயமும்தான். மதம் கடந்து மக்களைக் காப்போம். மக்களே மையம். வாழிய பாரதம்.