டி.என்.சேஷன் மறைவிற்கு கமல்ஹாசன் இரங்கல்
Send us your feedback to audioarticles@vaarta.com
இந்திய தேர்தல் ஆணையத்தின் 10வது தலைமை தேர்தல் ஆணையராக கடந்த 1990ஆம் ஆண்டு முதல் 1996ஆம் ஆண்டு வரை பதவி வகித்து தேர்தலில் பல சீர்திருத்தங்களை கொண்டு வந்து, அரசியல்வாதிகளுக்கு அடிபணியாமல் நியாயமான தேர்தல்களை நடத்தியவர் டி.என்.சேஷன். இவர் நேற்று இரவு தனது சென்னை இல்லத்தில் வயது மூப்பு மற்றும் உடல்நிலை காரணமாக காலமானார். அவரது மறைவிற்கு அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் டி.என்.சேஷன் மறைவு குறித்து உலக நாயகன் மற்றும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரான கமல்ஹாசன் கூறியபோது, ‘தைரியம், நம்பிக்கை உருவகமாக நினைவு கூறப்படுபவர் டி.என்.சேஷன் அவர்கள்’ என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் தேர்தல் ஆணையத்தின் சக்திவாய்ந்த பாத்திரத்தை பொதுமனிதனின் விவாதத்துக்கு எடுத்து வந்தவர் டி.என்.சேஷன் என்றும் கமல்ஹாசன் புகழாரம் சூட்டியுள்ளார்.
முன்னதாக கடந்த ஆண்டு டி.என்.சேஷன் அவர்களை அவரது இல்லத்தில் கமல்ஹாசன் மரியாதை நிமித்தமாக சந்தித்தார். இந்த சந்திப்பின்போது தனது உடல்நிலை சரியாக இருந்தால் உங்கள் கட்சியில் சேர்ந்திருப்பேன் என்றும், அரசியல் பயணம் பற்றிய சந்தேகங்களுக்கு விளக்கம்பெற எப்பொழுது வேண்டுமானாலும் தன்னை சந்திக்கலாம் என்றும் டி.என்.சேஷன் தன்னிடம் கூறியதாக கமல் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
TN Seshan will be remembered as an embodiment of courage & conviction. It was he who brought the powerful role of the “Election Commission” into the drawing room discussion of the Common Man.
— Kamal Haasan (@ikamalhaasan) November 11, 2019
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments