அரசின் ஒவ்வொரு தவறும் உயிர்களை பலி வாங்குகிறது: கமல்ஹாசன்

கொரோனா வைரஸ் காரணமாக இரண்டு கட்ட ஊரடங்கை கோடிக்கணக்கான மக்கள் பின்பற்றி கொரோனா வைரசுக்கு எதிரான போருக்கு ஒத்துழைப்பு கொடுத்தனர். ஒன்றரை மாதங்களாக வேலைக்கு செல்லாமல், வருமானம் இல்லாமல் அரசின் உத்தரவுக்கு கீழ்ப்படிந்து பெரும்பாலானோர் நடந்து கொண்டனர். அதேபோல் டாக்டர்கள், நர்ஸ்கள், சுகாதார ஊழியர்கள், காவல்துறையினர், துப்புரவு துறையினர் ஆகியோர் தன்னலம் கருதாது பணி செய்து கொரோனாவுக்கு எதிரான போரில் தங்களை ஈடுபடுத்தி கொண்டனர். இவர்களில் சிலர் உயிர்த்தியாகமும் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் கடந்த இரண்டு மாதங்களாக பொதுமக்களும் டாக்டர்களும் பட்ட கஷ்டங்கள் அனைத்தும் ஒரே நாளில் வீணாகும் வகையில் நேற்று மதுக்கடைகளை திறந்துவிட்டதால் விபரீதமாகியுள்ளது. மதுக்கடைகளில் சமூக விலகலை காற்றில் பறக்கவிட்டு கொரோனா வைரஸ் பயமின்றி மதுபாட்டில்களை வாங்க மக்கள் முண்டியத்தனர். இதில் மதுபாட்டில்களை வாங்கும் மக்களை குற்றம் சொல்வதா? இந்த இக்கட்டான நேரத்தில் மதுக்கடைகளை திறக்க அனுமதித்த அரசை குற்றம் சொல்வதா? என தெரியவில்லை என சமூக ஆர்வலர்கள் புலம்பி வருகின்றனர்.

இந்த நிலையில் மதுக்கடைகளை திறக்கும் முடிவை தற்போது தமிழக அரசும் எடுத்துள்ளதற்கு உலக நாயகன் நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் கூறியதாவது: கோயம்பேடை காப்பாற்ற இயலாமல் தொற்று எண்ணிக்கையை அதிகப் படுத்திய அரசு, இப்பொழுது டாஸ்மாக்கை திறக்குமாம். அரசின் ஒவ்வொரு தவறும் உயிர்களை பலி வாங்குவது புரியவில்லையா தலைமைக்கு’ என்று பதிவு செய்துள்ளார். கமல்ஹாசனின் இந்த பதிவுக்கு பெரும் வரவேற்பு கிடைத்து வருகிறது.

More News

மூன்று தயாரிப்பாளருக்கு சம்பளத்தை விட்டு கொடுத்த விஜய் ஆண்டனி

நடிகரும் இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனி, தான் நடித்து வரும் மூன்று திரைப்படங்களுக்கும் தனது சம்பளத்தை 25 சதவிகிதம் விட்டு கொடுத்துள்ளதாக மூன்று தயாரிப்பாளர்களில் ஒருவரான

மாட்டு வண்டியில் கிராமத்திற்கு செல்லும் சூப்பர் ஸ்டாரின் நிவாரண பொருட்கள்!

கொரோனா வைரஸ் காரணமாக நாடு முழுவதும் சுமார் ஒன்றரை மாதங்களுக்கும் மேலாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் ஏழை, எளிய மற்றும் நடுத்தர மக்கள் கடும் கஷ்டத்தில் உள்ளனர்.

கொரோனா நிவாரண நிதி!!! 1 லட்சம் பவுண்டுகளை வழங்கிய ஹாரிபாட்டர் எழுத்தாளர்!!!

புகழ்பெற்ற ஹாரி பாட்டர் கதைகளை எழுதிய எழுத்தாளர் ஜே.கே ராவ்லிங் கொரோனா நிவராண நிதியாக 1 லட்சம் பவுண்டுகளை வழங்கியுள்ளார்.

அரிசிக்கும் பருப்புக்கும் போய் நிற்ககூடாது: ரஜினி கொடுத்த நிவாரண உதவி குறித்து பிரபல தயாரிப்பாளர்

ஊரடங்கு உத்தரவு காரணமாக நலிந்த தயாரிப்பாளர்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்று பழம்பெரும் தயாரிப்பாளர் கே.ராஜன் அவர்களின் கோரிக்கையை ஏற்று 750 தயாரிப்பாளர்களுக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்

அவசரப்பட்டுட்டேன், என் கணிப்பு தப்பவில்லை: நடிகை கஸ்தூரி

தமிழகம் உட்பட இந்தியா முழுவதும் நேற்று முதல் மூன்றாம் கட்ட ஊரடங்கு ஆரம்பித்துள்ள நிலையில் நேற்று முதல் அண்டை மாநிலங்களில் மதுக்கடைகளும் திறக்கப்பட்டன.