இதெல்லாம் பக்தியாலும், பயத்தாலும் வருவது: கமல்ஹாசன் டுவீட்
Send us your feedback to audioarticles@vaarta.com
பிரபல கர்நாடக இசைக்கலைஞர் டிஎம் கிருஷ்ணா எழுதிய புத்தகம் ஒன்று பிப்ரவரி 2ம் தேதி வெளியிடுவதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் திடீரென இந்த புத்தக வெளியீட்டிற்கு அனுமதி தந்த கலாஷேத்திரா நிர்வாகம் அனுமதியை ரத்து செய்து கடிதம் அனுப்பி உள்ளது.
இந்த புத்தகத்தில் சர்ச்சைக்குரிய கருத்துக்கள் இருப்பதால் அனுமதி வழங்க இயலாது என்று அந்த கடிதத்தில் கலாசேத்திரா தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் திட்டமிட்டபடி வேறு இடத்தில் இந்த புத்தகம் வெளியிடப்படும் என டிஎம் கிருஷ்ணா செய்தியாளர்களிடம் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனையடுத்து சென்னையில் இந்த புத்தகம் இன்று மாலை வெளியிடப்பட உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
இதுகுறித்து உலக நாயகன் கமல்ஹாசன் அவர்கள் தனது சமூக வலை பக்கத்தில் கூறியிருப்பதாவது: மேல் நாட்டாருக்கு அடங்கி நடப்பதும், மேல் சாதிக்கு அடங்கி நடப்பதும், மேல் அதிகாரிக்கு அடங்கி நடப்பதும் வழிவழி வந்த பயத்தால், பக்தியால் வருவது. இந்த அளப்பெரிய குணாதிசயங்களில், எது ஒன்று சற்றே குறைந்தாலும், க்ஷேத்திரப்ரவேசத்திற்கு அருகதை "அற்றவனாகி " விடுவான் ஒரு இந்தியன். இசைக்கலைஞர் டி.எம்.கிருஷ்ணா அவர்களின் செபாஸ்டியன் அண்ட் சன்ஸ் என்கின்ற புத்தக வெளியீடு, இன்று மாலை தரமணியில் தடையின்றி, பயமின்றி நடக்கிறதாம். வாழ்த்துக்கள்’ என்று கமல்ஹாசன் பதிவு செய்துள்ளார்.
மேல் நாட்டாருக்கு அடங்கி நடப்பதும், மேல் சாதிக்கு அடங்கி நடப்பதும், மேல் அதிகாரிக்கு அடங்கி நடப்பதும் வழிவழி வந்த பயத்தால், பக்தியால் வருவது.
— Kamal Haasan (@ikamalhaasan) January 31, 2020
இந்த அளப்பெரிய குணாதிசயங்களில், எது ஒன்று சற்றே குறைந்தாலும், க்ஷேத்திரப்ரவேசத்திற்கு அருகதை "அற்றவனாகி " விடுவான் ஒரு இந்தியன்.(1/2)
இசைக்கலைஞர் @tmkrishna அவர்களின் Sebastian & sons என்கின்ற புத்தக வெளியீடு, Feb 2ஆம் தேதி மாலை, Asian college of journalism தரமணியில் தடையின்றி, பயமின்றி நடக்கிறதாம். வாழ்த்துக்கள்.(2/2)
— Kamal Haasan (@ikamalhaasan) January 31, 2020
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout