இதெல்லாம் பக்தியாலும், பயத்தாலும் வருவது: கமல்ஹாசன் டுவீட்

  • IndiaGlitz, [Friday,January 31 2020]

பிரபல கர்நாடக இசைக்கலைஞர் டிஎம் கிருஷ்ணா எழுதிய புத்தகம் ஒன்று பிப்ரவரி 2ம் தேதி வெளியிடுவதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் திடீரென இந்த புத்தக வெளியீட்டிற்கு அனுமதி தந்த கலாஷேத்திரா நிர்வாகம் அனுமதியை ரத்து செய்து கடிதம் அனுப்பி உள்ளது.

இந்த புத்தகத்தில் சர்ச்சைக்குரிய கருத்துக்கள் இருப்பதால் அனுமதி வழங்க இயலாது என்று அந்த கடிதத்தில் கலாசேத்திரா தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் திட்டமிட்டபடி வேறு இடத்தில் இந்த புத்தகம் வெளியிடப்படும் என டிஎம் கிருஷ்ணா செய்தியாளர்களிடம் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனையடுத்து சென்னையில் இந்த புத்தகம் இன்று மாலை வெளியிடப்பட உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

இதுகுறித்து உலக நாயகன் கமல்ஹாசன் அவர்கள் தனது சமூக வலை பக்கத்தில் கூறியிருப்பதாவது: மேல் நாட்டாருக்கு அடங்கி நடப்பதும், மேல் சாதிக்கு அடங்கி நடப்பதும், மேல் அதிகாரிக்கு அடங்கி நடப்பதும் வழிவழி வந்த பயத்தால், பக்தியால் வருவது. இந்த அளப்பெரிய குணாதிசயங்களில், எது ஒன்று சற்றே குறைந்தாலும், க்ஷேத்திரப்ரவேசத்திற்கு அருகதை அற்றவனாகி விடுவான் ஒரு இந்தியன். இசைக்கலைஞர் டி.எம்.கிருஷ்ணா அவர்களின் செபாஸ்டியன் அண்ட் சன்ஸ் என்கின்ற புத்தக வெளியீடு, இன்று மாலை தரமணியில் தடையின்றி, பயமின்றி நடக்கிறதாம். வாழ்த்துக்கள்’ என்று கமல்ஹாசன் பதிவு செய்துள்ளார்.

More News

அமலாபாலை அடுத்து ஆடையின்றி நடித்த பிக்பாஸ் புகழ் நடிகை

பிரபல நடிகை அமலாபால் சமீபத்தில் வெளியான 'ஆடை' என்ற படத்தில் ஆடையின்றி நடித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியில்

CAA-வை கிழித்து எறிந்துவிட்டு அம்பேத்கர் எழுதிய அரசியல் சாசனத்தை பின்பற்றுவோம்..! பாஜக எம்.எல்.ஏ.

நாட்டை எப்போதுமே மதத்தின் வழியில் பிரிக்கக்கூடாது. குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை கிழித்து எறிந்துவிட்டு, அனைத்து மக்களும் ஒன்றாக அம்பேத்கர் அமைத்துக் கொடுத்த அரசியல் சாசனத்தைப் பின்பற்ற வேண்டும்

பிக்பாஸ் சரவணன் - மதுமிதா திடீர் சந்திப்பு: இணைந்து நடிக்கின்றார்களா?

பிக்பாஸ் சரவணன் - மதுமிதா திடீர் சந்திப்பு: இணைந்து நடிக்கின்றார்களா?

கோவில் கோபுரத்தில் உள்ள நிர்வாணச் சிற்பங்கள், குறி வழிபாடு- அபத்தமா? ஆராதனையா?

வானத்தைப் பார்த்து உயர்ந்து நிற்கும் கோபுரங்கள் ஒவ்வொரு ஊருக்கும் அழகு சேர்க்கும் ஒரு பிரம்மாண்டம் தான்

மாணவர்களை துப்பாக்கியால் சுட்ட இந்துத்துவா ஆதரவாளர்..! வேடிக்கை பார்த்த போலீசார்.

மாணவர்கள் ஆசாதி முழக்கம் எழுப்பியபோது ஆத்திரமடைந்த அந்த நபர் கையில் இருந்த துப்பாக்கியை எடுத்துப் போராட்டக்காரர்களை நோக்கிச் சுட்டார்.