கேட்டது தண்ணீர், கிடைத்தது துணைவேந்தர்: நம்மை தூண்டி விடுகின்றார்களா? கமல்ஹாசன்

  • IndiaGlitz, [Friday,April 06 2018]

காவிரியில் இருந்து தண்ணீர் கிடைக்க வேண்டும் என்பதற்காக காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கர்நாடக மாநிலத்தையும் மத்திய அரசையும் தமிழக மக்கள் வலியுறுத்தி கொண்டிருக்கும் நிலையில் தமிழகத்தில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் கர்நாடகத்தை சேர்ந்த ஒருவரை துணைவேந்தராக நியமனம் செய்துள்ளார் தமிழக ஆளுனர். இந்த நடவடிக்கை தமிழர்களை கொதிப்படைய செய்துள்ளது.

இதுகுறித்து நடிகர் கமல்ஹாசன் தனது சமூக வலைத்தளத்தில் கூறியபோது, 'கர்நாடகாவிடம் இருந்து நாம் கேட்டது தண்ணீர், ஆனால் பெற்றதோ துணைவேந்தர். எனவே மக்களுக்கும் அரசாங்கத்திற்கும் இடையே உள்ள பிளவு வெளிப்படையாக தெரிகிறது. நம்மை எதிர்மறையாக நடந்து கொள்ள அவர்கள் தூண்டிவிடுகின்றார்களா? இந்த விளையாட்டை நினைத்து ஆச்சரியபடுகிறேன். என்று கூறியுள்ளார்.   

கர்நாடகத்தை சேர்ந்த ஒருவரை அண்ணா பல்கலைக்கழகத்தில் துணைவேந்தராக நியமனம் செய்ததை கமல் மட்டுமின்றி மு.க.ஸ்டாலின், ராமதாஸ் உள்ளிட்ட பலர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ஆனால் இது தமிழக அரசின் கட்டுப்பாட்டில் இல்லை என்று அமைச்சர் ஜெயகுமார் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.