ஆசிரியர்களுக்கு மரியாதை செய்வது நமது கடமை: கமல்ஹாசனின் ஆசிரியர் தின வாழ்த்து
Send us your feedback to audioarticles@vaarta.com
மாதா, பிதாவை அடுத்து குருவுக்கு நமது முன்னோர்கள் முக்கியத்துவம் கொடுத்திருக்கும் நிலையில் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 5ஆம் தேதி ஆசிரியர் தின நாள் கொண்டாடப்பட்டு ஆசிரியர்கள் கெளரவிக்கப்பட்டு வருகின்றனர்.
அந்த வகையில் இன்றைய ஆசிரியர் தின விழாவை முன்னிட்டு குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, எதிர்க்கட்சி தலைவர் முக ஸ்டாலின் உள்ளிட்ட பலர் ஆசிரியர் தின வாழ்த்து செய்தியை வெளியிட்டுள்ளனர்.
இந்த நிலையில் நடிகரும் அரசியல் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் தனது சமூக வலைத்தள பக்கத்தில் தெரிவித்த ஆசிரியர் தின வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது: கையடக்க தொலைபேசியிலேயே அனைத்தையும் கற்றுக்கொள்ள முடியும் என்ற நிலையில், இந்தத் தலைமுறையினருக்கு அறம் சார்ந்த அறிவையும், திறனையும் கற்றுத்தந்திட மனிதத்துடன் கூடிய ஆசிரியர்கள் அவசியமானவர்கள். அவ்வாறான ஆசிரியர்களுக்கு மரியாதை செய்வது நமது கடமை. ஆசிரியர் தின வாழ்த்துக்கள்.
கையடக்க தொலைபேசியிலேயே அனைத்தையும் கற்றுக்கொள்ள முடியும் என்ற நிலையில், இந்தத் தலைமுறையினருக்கு அறம் சார்ந்த அறிவையும், திறனையும் கற்றுத்தந்திட மனிதத்துடன் கூடிய ஆசிரியர்கள் அவசியமானவர்கள். அவ்வாறான ஆசிரியர்களுக்கு மரியாதை செய்வது நமது கடமை. ஆசிரியர் தின வாழ்த்துக்கள்.
— Kamal Haasan (@ikamalhaasan) September 5, 2019
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments