திருத்திக்கொள்க, இல்லையேல்...ஊடகங்களுக்கு கமல் எச்சரிக்கை
- IndiaGlitz, [Tuesday,March 06 2018]
நடிகர் கமல்ஹாசன் கடந்த மாதம் அரசியல் கட்சி ஆரம்பித்து அதற்கு உறுப்பினர்களை சேர்க்கும் பணியில் தீவிரமாக உள்ளார். வரும் 8ஆம் தேதி சென்னையில் மகளிர் தின மாநாடு, ஏப்ரல் 4ஆம் தேதி திருச்சியில் பொதுக்கூட்டம் என பிசி அரசியலில் உள்ள நிலையில் அவர் சமீபத்தில் மது குறித்து ஒரு சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்திருந்தார்.
தற்போதைய அரசியல் சூழலில் தமிழகத்தில் உள்ள கட்சிகள் பல பூரண மதுவிலக்கு என்று கூறி வருகின்றன. இவ்வாறு பூச்சாண்டி காட்டக் கூடாது. மது குடிப்பதை குறைக்கலாம். ஆனால் முழுமையாக நிறுத்த முடியுமா என்பது சந்தேகமாக உள்ளது. ஒட்டுமொத்த சமுதாயத்தையும் மதுவை விரும்பாதவா்களாக மாற்ற முடியாது என்றும் அப்படி மாற்றினால் கள்ளினால் ஏற்படும் கொடுமைகளை விட போதிய அளவிலான கொலைகள் பல நடக்கும் என்றும் மதுவை உடனடியாக நிறுத்த உடம்பு கேட்காது. இது உடம்பு கேட்கும் வியாதி என்றும் கமல் கருத்து தெரிவித்திருந்தார்
கமல்ஹாசனின் இந்த கருத்து குறித்து டாஸ்மாக்குக்கு கமல் ஆதரவு என்ற தொனியில் ஊடகங்களில் செய்தி வெளியானது. இதனையடுத்து கமல்ஹாசன் இவ்வித செய்தியை வெளியிடும் ஊடகங்களுக்கு எச்சரிக்கை தரும் வகையில் தனது சமூக வலைத்தளத்தில் கூறியதாவது: ஊடக நண்பரே! டாஸ்மாக்குக்கு (TASMAC) கமல் ஆதரவு என்ற செய்தி தவறு. திருத்திக்கொள்க. இல்லையேல் பொய் சொல்கிறீர் என்ற குற்றச்சாட்டிற்கு ஆளாவீர்' என்று கூறியுள்ளார். கமல்ஹாசனின் இந்த டுவீட் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.