ஊர்கூடி கட்டிக்காத்ததை காற்றில் விடுவது நியாயமா? கமல்ஹாசன் கேள்வி
- IndiaGlitz, [Friday,May 08 2020]
நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரான கமல்ஹாசன் கடந்த சில மாதங்களாகவே மத்திய, மாநில அரசுகளை கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர். மக்கள் ஆட்சியாளர்களிடம் கேட்க நினைத்த கேள்விகளை கமல்ஹாசன் கேட்டு வருவதால் அவருக்கு ஆதரவு குவிந்தது.
இந்த நிலையில் கொரோனா காரணமாக அமல்படுத்தப்பட்ட திடீர் ஊரடங்கு, ஏழை எளிய மக்களின் வாழ்வாதாரத்திற்கு எந்தவித அறிவிப்பும் இல்லாதது போன்றவைகளுக்கு கடுமையாக விமர்சனம் செய்த கமல்ஹாசன், நேற்று ‘தாங்குமா தமிழகம்’ என்ற தலைப்பில் ஒரு நீண்ட அறிக்கைகளை வெளியிட்டு அதில் மாநில அரசின் டாஸ்மாக் திறக்கும் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் அதன் தொடர்ச்சியாக சற்றுமுன் அவர் மேலும் டுவீட்டை பதிவு செய்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: மருத்துவர்கள், காவலர்கள், தூய்மைப் பணியாளர்கள் உயிரைப் பணயம் வைத்து போராடிக் கொண்டு இருக்கின்றனர். நடுத்தர மக்கள் வீட்டில் கட்டுண்டு இருக்கின்றனர். ஏழைகள் வாழ வழியின்றி தவிக்கின்றனர். தற்போது டாஸ்மாக் திறந்து விட்டு, ஊர்கூடி கட்டிக்காத்ததை காற்றில் விடுவது நியாயமா? #தாங்குமா தமிழகம்’ என்று குறிப்பிட்டுள்ளார். கமல்ஹாசனின் இந்த டுவிட்டுக்கும் நெட்டிசன்களின் பேராதரவு கிடைத்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
மருத்துவர்கள்,காவலர்கள், தூய்மைப் பணியாளர்கள் உயிரைப் பணயம் வைத்து போராடிக் கொண்டு இருக்கின்றனர்.நடுத்தர மக்கள் வீட்டில் கட்டுண்டு இருக்கின்றனர்.ஏழைகள் வாழ வழியின்றி தவிக்கின்றனர். தற்போது டாஸ்மாக் திறந்து விட்டு, ஊர்கூடி கட்டிக்காத்ததை காற்றில் விடுவது நியாயமா? #தாங்குமாதமிழகம்
— Kamal Haasan (@ikamalhaasan) May 8, 2020