அத்தனை அரசியல்வாதிகளும் குற்றவாளிகளே: சோபியா விவகாரம் குறித்து கமல்
Send us your feedback to audioarticles@vaarta.com
தமிழக பாஜக தலைவர் தமிழிசை செளந்திரராஜன் சென்னையில் இருந்து தூத்துகுடிக்கு விமானத்தில் சென்று கொண்டிருந்தபோது அதே விமானத்தில் பயணம் செய்த சோபியா என்ற மாணவி, 'பாஸிச பாஜக ஒழிக' என்று கோஷமிட்டார். இந்த விவகாரம் விஸ்வரூபமாகி, தமிழிசை கொடுத்த புகாரினால் சோபியா கைது செய்யப்பட்டார். இந்த நிலையில் தூத்துகுடி நீதிமன்றம் இன்று சோபியாவுக்கு ஜாமீன் அளித்துள்ளது.
தமிழிசை-சோபியா மோதல் விவகாரம் குறித்து அனைத்து அரசியல் கட்சி தலைவர்களும் கருத்து கூறி வருகின்றனர். எதிர்பார்த்தது போலவே அதிமுக, பாஜக தலைவர்கள் தவிர அனைவரும் பாஜக தலைவர் தமிழிசைக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
கமல்ஹாசன் தன்னுடைய சமூக வலைத்தள பக்கத்தில் தனது கருத்தை பதிவு செய்துள்ளார். அவர் கூறியதாவது: பொது இடங்களில் குரல் எழுப்புவதும், விமர்சிப்பதும் குற்றமெனில் அத்தனை அரசியல்வாதிகளும் கைது செய்யப் படவேண்டிய குற்றவாளிகளே. சுதந்திரப்பறவை சோபியாவை சிறையிலிருந்து பெயிலில் எடுக்கிறோம். அரசியல்வாதிகள் ஏன் வெளியே திரிகிறார்கள்? நானும் அரசியல்வாதிதான் என்பதை உணர்ந்தே சொல்கிறேன்' என்று கமல் கூறியுள்ளார்.
பொது இடங்களில் குரல் எழுப்புவதும்,விமர்சிப்பதும் குற்றமெனில் அத்தனை அரசியல்வாதிகளும் கைது செய்யப் படவேண்டிய குற்றவாளிகளே. சுதந்திரப்பறவை சோபியாவை சிறையிலிருந்து பெயிலில் எடுக்கிறோம்.அரசியல்வாதிகள் ஏன் வெளியே திரிகிறார்கள்?
— Kamal Haasan (@ikamalhaasan) September 4, 2018
நானும் அரசியல்வாதிதான் என்பதை உணர்ந்தே சொல்கிறேன்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com