அத்தனை அரசியல்வாதிகளும் குற்றவாளிகளே: சோபியா விவகாரம் குறித்து கமல்

  • IndiaGlitz, [Tuesday,September 04 2018]

தமிழக பாஜக தலைவர் தமிழிசை செளந்திரராஜன் சென்னையில் இருந்து தூத்துகுடிக்கு விமானத்தில் சென்று கொண்டிருந்தபோது அதே விமானத்தில் பயணம் செய்த சோபியா என்ற மாணவி, 'பாஸிச பாஜக ஒழிக' என்று கோஷமிட்டார். இந்த விவகாரம் விஸ்வரூபமாகி, தமிழிசை கொடுத்த புகாரினால் சோபியா கைது செய்யப்பட்டார். இந்த நிலையில் தூத்துகுடி நீதிமன்றம் இன்று சோபியாவுக்கு ஜாமீன் அளித்துள்ளது.
 
தமிழிசை-சோபியா மோதல் விவகாரம் குறித்து அனைத்து அரசியல் கட்சி தலைவர்களும் கருத்து கூறி வருகின்றனர். எதிர்பார்த்தது போலவே அதிமுக, பாஜக தலைவர்கள் தவிர அனைவரும் பாஜக தலைவர் தமிழிசைக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
 
கமல்ஹாசன் தன்னுடைய சமூக வலைத்தள பக்கத்தில் தனது கருத்தை பதிவு செய்துள்ளார். அவர் கூறியதாவது: பொது இடங்களில் குரல் எழுப்புவதும், விமர்சிப்பதும் குற்றமெனில் அத்தனை அரசியல்வாதிகளும் கைது செய்யப் படவேண்டிய குற்றவாளிகளே. சுதந்திரப்பறவை சோபியாவை சிறையிலிருந்து பெயிலில் எடுக்கிறோம். அரசியல்வாதிகள் ஏன் வெளியே திரிகிறார்கள்? நானும் அரசியல்வாதிதான் என்பதை உணர்ந்தே சொல்கிறேன்' என்று கமல் கூறியுள்ளார்.

More News

தமிழிசை இப்படி செய்திருக்கலாம்:

ஜனநாயக நாட்டில் ஒரு கட்சிக்கோ, தலைவருக்கோ எதிர்ப்பு தெரிவிப்பது என்பது ஜனநாயக உரிமை. பாரத பிரதமர் தமிழகம் வந்தபோதே எதிர்ப்பு தெரிவித்து கருப்புக்கொடி காட்டியவர்கள் தமிழர்கள்

உதயநிதி-மிஷ்கின் படத்தின் டைட்டில் குறித்த தகவல்

விஷால் நடித்த 'துப்பறிவாளன்' படத்திற்கு பின்னர் மிஷ்கின் இயக்கும் அடுத்த படத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிக்கவுள்ளார் என்பது தெரிந்ததே. இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகள் தொடங்கியுள்ள

பாஜகவுக்கு எதிராக கோஷமிட்ட சோபியாவுக்கு ஜாமீன்

தமிழக பாஜக தலைவர் தமிழிசை செளந்திரராஜன் முன்பு 'பாஸிச பாஜக ஒழிக' என்று கோஷமிட்ட மாணவி சோபியா மீது தமிழிசை கொடுத்த புகாரின் அடிப்படையில் 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

தமிழிசை-சோபியா விவகாரம்: 10 மொழிகளில் டிரெண்ட் ஆகும் ஹேஷ்டேக்குகள்

தமிழக பாஜக தலைவர் தமிழிசை செளந்திரராஜன் பயணம் செய்த விமானத்தில் பயணம் செய்த சோபியா என்ற இளம்பெண் 'பாஸிச பாஜக ஒழிக' என்று கோஷமிட்ட் விவகாரம் தற்போது பூதாகரமாகிவிட்டது

தமிழ் நடிகரின் மனைவி தூக்கில் தொங்கி தற்கொலை: போலீசார் விசாரணை

கடந்த சில மாதங்களாகவே மன அழுத்தம் உள்பட பல்வேறு காரணங்களால் சின்னத்திரை மற்றும் சினிமா நட்சத்திரங்களின் தற்கொலைகள் அதிகரித்து வரும் நிலையில்