'தமிழ்நாடு வாழ்க': கமல்ஹாசனின் சாட்டையடி டுவிட்
Send us your feedback to audioarticles@vaarta.com
சமூக வலைதளங்களில் குறிப்பாக டுவிட்டரில் நேற்று மாலை முதல் தமிழ்நாடு என்ற ஹேஸ்டேக் இந்திய அளவில் டிரெண்ட் ஆகி வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி அவர்கள் தமிழ்நாடு என்று அழைப்பதற்கு பதிலாக தமிழகம் என்று அழைக்க வேண்டும் என்றும் அதுதான் சரியான உச்சரிப்பு ஆக இருக்கும் என்றும் தெரிவித்திருந்தார்.
இதற்கு கடும் கண்டனம் தெரிவித்த அரசியல் கட்சி தலைவர்கள் தமிழ்நாடு என்று தான் அழைப்போம் என்று அண்ணா எங்களுக்கு பெற்றுத்தந்த தமிழ்நாடு என்ற பெயரை நாங்கள் என்றென்றும் கைவிட மாட்டோம் என்றும் தெரிவித்து வருகின்றனர்.
அரசியல் கட்சிகளுக்கு ஆதரவாக நெட்டிசன்கள் சமூக வலைத்தளத்தில் களத்தில் இறங்கி தமிழ்நாடு என்ற ஹேஷ்டேக்கை இந்திய அளவில் டிரெண்ட் ஆக்கி வருகின்றனர் என்பதும் கடந்த பல மணி நேரமாக இந்த ஹேஷ்டேக் இந்திய அளவில் டிரெண்ட் ஆகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் உலக நாயகன் கமல்ஹாசன் அவர்கள் தனது டுவிட்டர் பக்கத்தில் ’தமிழ்நாடு வாழ்க’ என தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி, ஆங்கிலம் ஆகிய மொழிகலில் பதிவு செய்துள்ளார். அதாவது அவருடைய பதிவில் கூறியிருப்பது இதுதான்:
#தமிழ்நாடு வாழ்க
#തമിഴ്നാട് വിജയിക്കട്ടെ
#తమిళనాడు వర్ధిల్లాలి
#ತಮಿಳುನಾಡಿಗೆ ಜಯವಾಗಲಿ
#तमिलनाडु जयहो ।
Long live #TamilNadu
Long live #India
அனைத்து மொழிகளிலும் அவர் தமிழ்நாடு வாழ்க என பதிவு செய்துள்ளது இந்த கேள்வியை எழுப்பியவர்களுக்கு தகுந்த சாட்டையடியாக இருப்பதாக நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
#தமிழ்நாடு வாழ்க #തമിഴ്നാട് വിജയിക്കട്ടെ#తమిళనాడు వర్ధిల్లాలి#ತಮಿಳುನಾಡಿಗೆ ಜಯವಾಗಲಿ#तमिलनाडु जयहो ।
— Kamal Haasan (@ikamalhaasan) January 6, 2023
Long live #TamilNadu
Long live #India
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments