இனிய நண்பரை இழந்துவிட்டேன், என் அஞ்சலி: கமல்ஹாசன் இரங்கல்
Send us your feedback to audioarticles@vaarta.com
எனது இனிய நண்பர் இழந்துவிட்டேன் என உலகநாயகன் கமலஹாசன் தனது டுவிட்டரில் அஞ்சலி தெரிவித்துள்ளார்
பிரபல வில்லிசை வேந்தர் சுப்பு ஆறுமுகம் வயது முதிர்வு காரணமாக சற்றுமுன் காலமானார். அவருக்கு வயது 93.
திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த 1928ஆம் ஆண்டு பிறந்த சுப்பு ஆறுமுகம் சுதந்திர போராட்ட காலத்திலேயே வில்லுப்பாட்டுக்களை பாடி வந்தார் என்பதும் தேசபக்தியை அதன்மூலம் வளர்த்து வந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது
40 வருடங்களுக்கும் மேலாக வில்லுப்பாட்டு கச்சேரியை பள்ளி கல்லூரிகள் உள்பட பல இடங்களில் நடத்தி பொதுமக்களின் ஆதரவைப் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது
கலைவாணர் என்எஸ் கிருஷ்ணன், நாகேஷ் போன்ற நகைச்சுவை நடிகர்களுக்காக பல திரைப்படங்களில் நகைச்சுவை பகுதிகளையும் இவர் எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் கமல்ஹாசன் நடித்த ’உத்தம வில்லன்’ என்ற படத்தில் இடம்பெற்ற வில்லுப் பாட்டை எழுதி பாடி நடித்தவரும் இவர் தான் என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் வயது முதிர்வு காரணமாக வில்லிசை வேந்தர் சுப்பு ஆறுமுகம் அவர்கள் காலமான நிலையில் உலகநாயகன் கமல்ஹாசன் தனது டுவிட்டர் பக்கத்தில் அவரது மறைவிற்கு இரங்கல் தெரிவித்து உள்ளார். அவர் இது குறித்து கூறியிருப்பதாவது:
வில்லிசை வேந்தர் சுப்பு ஆறுமுகம் கலைவாணர் என்.எஸ்.கே கண்டெடுத்த இசைவாணர். வில்லுப்பாட்டு கலையை வளர்ப்பதிலேயே வாழ்நாளை அர்ப்பணித்துக்கொண்டவர். அதில் பல புதுமைகளைப் புகுத்தி வில்லடியை வெகுமக்களுக்கும் கொண்டுசேர்த்தவர். அபாரமான நகைச்சுவை எழுத்தாளரும் கூட. இனிய நண்பரை இழந்து விட்டேன். என் அஞ்சலி
அதில் பல புதுமைகளைப் புகுத்தி வில்லடியை வெகுமக்களுக்கும் கொண்டுசேர்த்தவர். அபாரமான நகைச்சுவை எழுத்தாளரும் கூட. இனிய நண்பரை இழந்து விட்டேன். என் அஞ்சலி. (2/2)
— Kamal Haasan (@ikamalhaasan) October 10, 2022
மக்கள் மறந்த மண்சார்ந்த கலைகளையும், மக்கள் இசைக் கலைஞர்களையும் இன்றைய தலைமுறைக்கு எடுத்துக்காட்டி அந்த கலைஞர்கள் வாழும் போதே அவர்களுக்கு பெருமை சேர்ப்பவர் நம்மவர் @ikamalhaasan
— கமல் தாசன் (@ikamaldhasan) October 10, 2022
வில்லிசை வேந்தர் அய்யா சுப்பு ஆறுமுகம் அவர்களுக்கு அஞ்சலி ?? https://t.co/yQGNP2VFOf pic.twitter.com/uK6CimZqte
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments