இனிய நண்பரை இழந்துவிட்டேன், என் அஞ்சலி: கமல்ஹாசன் இரங்கல்

  • IndiaGlitz, [Monday,October 10 2022]

எனது இனிய நண்பர் இழந்துவிட்டேன் என உலகநாயகன் கமலஹாசன் தனது டுவிட்டரில் அஞ்சலி தெரிவித்துள்ளார்

பிரபல வில்லிசை வேந்தர் சுப்பு ஆறுமுகம் வயது முதிர்வு காரணமாக சற்றுமுன் காலமானார். அவருக்கு வயது 93.

திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த 1928ஆம் ஆண்டு பிறந்த சுப்பு ஆறுமுகம் சுதந்திர போராட்ட காலத்திலேயே வில்லுப்பாட்டுக்களை பாடி வந்தார் என்பதும் தேசபக்தியை அதன்மூலம் வளர்த்து வந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது

40 வருடங்களுக்கும் மேலாக வில்லுப்பாட்டு கச்சேரியை பள்ளி கல்லூரிகள் உள்பட பல இடங்களில் நடத்தி பொதுமக்களின் ஆதரவைப் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது

கலைவாணர் என்எஸ் கிருஷ்ணன், நாகேஷ் போன்ற நகைச்சுவை நடிகர்களுக்காக பல திரைப்படங்களில் நகைச்சுவை பகுதிகளையும் இவர் எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் கமல்ஹாசன் நடித்த ’உத்தம வில்லன்’ என்ற படத்தில் இடம்பெற்ற வில்லுப் பாட்டை எழுதி பாடி நடித்தவரும் இவர் தான் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் வயது முதிர்வு காரணமாக வில்லிசை வேந்தர் சுப்பு ஆறுமுகம் அவர்கள் காலமான நிலையில் உலகநாயகன் கமல்ஹாசன் தனது டுவிட்டர் பக்கத்தில் அவரது மறைவிற்கு இரங்கல் தெரிவித்து உள்ளார். அவர் இது குறித்து கூறியிருப்பதாவது:

வில்லிசை வேந்தர் சுப்பு ஆறுமுகம் கலைவாணர் என்.எஸ்.கே கண்டெடுத்த இசைவாணர். வில்லுப்பாட்டு கலையை வளர்ப்பதிலேயே வாழ்நாளை அர்ப்பணித்துக்கொண்டவர். அதில் பல புதுமைகளைப் புகுத்தி வில்லடியை வெகுமக்களுக்கும் கொண்டுசேர்த்தவர். அபாரமான நகைச்சுவை எழுத்தாளரும் கூட. இனிய நண்பரை இழந்து விட்டேன். என் அஞ்சலி
 

More News

'தளபதி 67' படத்தில் நான் இல்லை: லோகேஷ் கனகராஜ் நண்பர் டுவிட்

தளபதி விஜய் தற்போது 'வாரிசு' திரைப்படத்தில் நடித்து வரும் நிலையில் அவர் நடிக்க இருக்கும் அடுத்த திரைப்படமான 'தளபதி 67' படம் குறித்த தகவல்கள் ஒவ்வொரு நாளும் வெளிவந்து கொண்டிருக்கின்றன

அமெரிக்காவில் அதிக வசூல் செய்த தமிழ் திரைப்படங்கள்: விஜய், அஜித் படங்கள் இல்லையா?

அமெரிக்காவில் அதிக வசூல் செய்த ஐந்து தமிழ் திரைப்படங்கள் குறித்த பட்டியல் வெளியாகி உள்ள நிலையில் இந்த பட்டியலில் விஜய், அஜித் படங்கள் ஒன்று கூட இல்லை என்பது பெரும் ஆச்சரியத்தை அளித்துள்ளது.

யாருக்குமே புடிக்காம இருந்த என்ன உனக்கு மட்டும் எப்படி புடிச்சுது? அறந்தாங்கி நிஷாவின் நெகிழ்ச்சி பதிவு

விஜய் டிவி மூலம் பிரபலமாகி திரையுலகிலும் நடித்து வரும் அறந்தாங்கி நிஷா இன்று தனது திருமண நாளை கொண்டாடி வரும் நிலையில் தனது கணவர் குறித்து தனது சமூக வலைத்தளத்தில் நெகிழ்ச்சியாக பதிவு செய்துள்ளார். 

'எங்க ஏரியா உள்ள வராதே'.. முதல் நாளே ஆட்டம் போடும் பிக்பாஸ் போட்டியாளர்கள்!

விஜய் டிவியில் பிக்பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சி நேற்று முதல் தொடங்கியது என்பதும் நேற்றைய அறிமுக நிகழ்ச்சியில் 20 போட்டியாளர்களின் அறிமுகம் பிரமாண்டமாக நடைபெற்றது

ரஜினியின் '2.0' லைஃப்டைம் வசூலை 'பொன்னியின் செல்வன்' முறியடித்துவிட்டதா? ஆச்சரிய தகவல்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த '2.0'  படத்தின் லைஃப்டைம் வசூலை பத்தே நாட்களில் மணிரத்னம் இயக்கிய 'பொன்னியின் செல்வன்' முறியடித்து உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.