பல உயிர்களின் தியாகத்தில் கிடைத்துள்ள நீதி: ஸ்டெர்லைட் தீர்ப்பு குறித்து கமல்ஹாசன்
- IndiaGlitz, [Tuesday,August 18 2020]
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறப்பது குறித்த வழக்கு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்த நிலையில் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதிக்க முடியாது என்றும், ஸ்டெர்லைட் ஆலைக்கு மின் இணைப்பு, குடிநீர் இணைப்பை மீண்டும் தர உத்தரவிட முடியாது என்றும், ஸ்டெர்லைட் ஆலைக்கு அனுமதி கோரி தாக்கல் செய்த மனுக்கள் அனைத்தையும் சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
இதனால் தூத்துக்குடி மக்கள் உற்சாகத்தில் உள்ளனர் என்பதும் அப்பகுதி மக்கள் ஒருவருக்கொருவர் இனிப்புகள் வழங்கி உற்சாகமாக இந்த தீர்ப்பை கொண்டாடி வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் ஸ்டெர்லைட் ஆலை குறித்த வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பு குறித்து ஏற்கனவே திமுக எம்பி கனிமொழி, மதிமுக எம்பி வைகோ உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் கருத்து கூறி வருகின்றனர். இந்த நிலையில் உலக நாயகன் கமல்ஹாசன் சற்றுமுன் இந்த தீர்ப்பு குறித்து கூறியதாவது:
ஸ்டெர்லைட் தடை தொடரும் என்கின்ற நீதிமன்றத் தீர்ப்பு பல உயிர்களின் தியாகத்தில் கிடைத்துள்ள நீதி. இத்தீர்ப்பின் அவசியத்தை, அவர்களின் வலியை, அருகில் இருந்து உணர்ந்த சகோதரன் நான். மக்களின் குரல் என்றும் வெல்லும் என்பதற்கு இது மற்றுமொரு சான்று’ என்று கமல்ஹாசன் கூறியுள்ளார்.
முன்னதாக நேற்று கமல்ஹாசன் இதுகுறித்து பதிவு செய்த ஒரு டுவிட்டில், ‘நாளை ஸ்டெர்லைட் வழக்கில் தீர்ப்பு. நீதியை நம்புகிறோம். நாளை நமதாகவே இருக்கும் என நம்பும் பல கோடி மக்களின் எண்ணப் பிரதிபலிப்பாக... உங்கள் நான் என்று பதிவு செய்திருந்தார்.
ஸ்டெர்லைட் தடை தொடரும் என்கின்ற நீதிமன்றத் தீர்ப்பு பல உயிர்களின் தியாகத்தில் கிடைத்துள்ள நீதி.
— Kamal Haasan (@ikamalhaasan) August 18, 2020
இத்தீர்ப்பின் அவசியத்தை, அவர்களின் வலியை, அருகில் இருந்து உணர்ந்த சகோதரன் நான்.
மக்களின் குரல் என்றும் வெல்லும் என்பதற்கு இது மற்றுமொரு சான்று.