தொரகா ரண்டி அன்னைய்யா: எஸ்பிபி குறித்த கமல்ஹாசனின் பதிவு
Send us your feedback to audioarticles@vaarta.com
பிரபல பின்னணி பாடகர் எஸ்பி பாலசுப்ரமணியம் அவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு கடந்த சில நாட்களாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அவருடைய உடல்நிலை நேற்று முன்தினம் கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை அறிவித்து இருந்தாலும் இன்று காலை எஸ்பி பாலசுப்பிரமணியம் அவர்கள் மயக்க நிலையிலிருந்து மீண்டு விட்டார் என்றும் அவர் கண் விழித்து பார்ப்பதாகவும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன. இதனை அடுத்து எஸ்பிபி ரசிகர்கள் மகிழ்ச்சியுடன் உள்ளனர்.
எஸ்பிபி அவர்கள் விரைவில் குணமாகி வீடு திரும்ப வேண்டும் என்று கோடிக்கணக்கான அவரது ரசிகர்களும் திரை உலகில் உள்ள அனைத்து தரப்பினர்களும் பிரார்த்தனை செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. திரையுலகில் ஒரு எதிரி கூட இல்லாத எஸ்பி பாலசுப்பிரமணியம் அவர்களுக்காக ஒட்டுமொத்த திரையுலகமும் பிரார்த்தனைகள் செய்வதில் எந்தவித ஆச்சரியமும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் கமலஹாசனின் குரலாக பல படங்களில் இருந்துள்ள எஸ்பி பாலசுப்பிரமணியன் அவர்களுக்கு கமலஹாசன் தனது டுவிட்டரில் ஒரு ட்வீட்டை பதிவு செய்துள்ளார். அந்த டுவீட்டில் அவர் கூறியிருப்பதாவது:
அன்பிற்கினிய அன்னைய்யா, உங்களுக்காக நாங்கள் காத்திருக்கிறோம். எனது குரலாக நீங்களும், உமது முகமாக நானும் பல ஆண்டுகள் வாழ்ந்திருக்கிறோம். உங்கள் குரல் இன்னும் ஒலித்திட வேண்டும். மீண்டும் வாருங்கள். தொரகா ரண்டி அன்னைய்யா.
அன்பிற்கினிய அன்னைய்யா, உங்களுக்காக நாங்கள் காத்திருக்கிறோம்.
— Kamal Haasan (@ikamalhaasan) August 16, 2020
எனது குரலாக நீங்களும், உமது முகமாக நானும் பல ஆண்டுகள் வாழ்ந்திருக்கிறோம்.
உங்கள் குரல் இன்னும் ஒலித்திட வேண்டும். மீண்டும் வாருங்கள். தொரகா ரண்டி அன்னைய்யா ??
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com