உயிரிழந்தோர் ஓலம் தேர்தல் பிரச்சார இரைச்சலில் அடங்கி விடக்கூடாது: கமல்ஹாசன்
- IndiaGlitz, [Saturday,February 13 2021]
சாத்தூரில் நேற்று நிகழ்ந்த பட்டாசு தொழிற்சாலை விபத்தில் உயிரிழந்தோர் ஓலம் தேர்தல் பிரச்சார இறைச்சலில் அடங்கி விடக்கூடாது என்றும் உடனடி நடவடிக்கை தேவை என்றும் உலகநாயகன் நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.
சாத்தூர் அருகே நேற்று பட்டாசு ஆலையில் திடீரென ஏற்பட்ட வெடி விபத்தில் 19 பேர் உயிரிழந்தனர். மேலும் சிலர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக வருவதாகவும் இதனால் பலி எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாகவும் அஞ்சப்படுகிறது.
இந்த நிலையில் இந்த விபத்து குறித்து பிரதமர் மோடி, காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி உள்பட பலர் தங்களுடைய வருத்தத்தை தெரிவித்திருந்த நிலையில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தனது டுவிட்டரில் இதுகுறித்து கூறியதாவது:
அன்றாடம் செத்துப் பிழைக்கும் தொழிலாகத்தான் பட்டாசுத் தொழிலாளர்களின் வாழ்வு இருந்தது. இப்போதோ 19 பேர் உயிரிழந்திருக்கிறார்கள். பலரும் மருத்துவமனைகளில் உயிருக்குப் போராடிக்கொண்டிருக்கிறார்கள். தொழிலாளர்களின் பாதுகாப்பை நாம் எப்போது உறுதி செய்யப்போகிறோம்? உயிரிழந்தோர் ஓலம் தேர்தல் பிரச்சார இரைச்சலில் அடங்கி விடக்கூடாது. உடனடி நடவடிக்கைகள் தேவை.
அன்றாடம் செத்துப் பிழைக்கும் தொழிலாகத்தான் பட்டாசுத் தொழிலாளர்களின் வாழ்வு இருந்தது. இப்போதோ 19 பேர் உயிரிழந்திருக்கிறார்கள். பலரும் மருத்துவமனைகளில் உயிருக்குப் போராடிக்கொண்டிருக்கிறார்கள். தொழிலாளர்களின் பாதுகாப்பை நாம் எப்போது உறுதி செய்யப்போகிறோம்?! (1/2)
— Kamal Haasan (@ikamalhaasan) February 13, 2021