சரத்பாபு குறித்து கமல்ஹாசன் ட்விட்.. இருவரும் சேர்ந்த நடித்த படங்கள் என்னென்ன தெரியுமா?
Send us your feedback to audioarticles@vaarta.com
பழம்பெரும் குணச்சித்திர நடிகர் சரத்பாபு இன்று காலமானார் என்ற செய்தி தமிழ் தெலுங்கு திரை உலகிற்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. குறிப்பாக தமிழ் திரை உலகில் கமல்ஹாசன், ரஜினிகாந்த் ஆகிய இருவரது படங்களில் குணச்சித்திர கேரக்டரில் சரத்பாபு நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் சரத்பாபுவின் மறைவுக்கு உலகநாயகன் கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் தனது ட்விட்டரில் கூறியிருப்பதாவது:
சிறந்த நடிகரும், அருமை நண்பருமான சரத்பாபு மறைந்துவிட்டார். அவருடன் இணைந்து நடித்த நாட்கள் என் மனதில் நிழலாடுகின்றன. தமிழில் என் குருநாதரால் அறிமுகப்படுத்தப்பட்டவர். காலத்தால் அழியாத பல பாத்திரங்களை ஏற்று சிறப்பு செய்தவர். ஒரு நல்ல நடிகரை சினிமா இழந்திருக்கிறது. அவருக்கு என் அஞ்சலி.
உலகநாயகன் கமல்ஹாசன் மற்றும் சரத் பாபு ஆகிய இருவரும் பல திரைப்படங்களில் இணைந்து நடித்துள்ளனர். கே. பாலச்சந்தர் இயக்கத்தில் உருவான ’நிழல் நிஜமாகிறது’ என்ற படத்தில் இருவரும் போட்டி போட்டு நடித்து இருந்தனர். அதேபோல் ’நினைத்தாலே இனிக்கும்’, ’சிப்பிக்குள் முத்து’, ’சட்டம்’, ’ஆளவந்தான்’ உள்பட ஒரு சில படங்களில் இணைந்து நடித்துள்ளனர்.
அதேபோல் சூப்பர் ஸ்டார் ரஜினியின் 'முள்ளும் மலரும்’ ’வேலைக்காரன்’ 'முத்து’ ‘பாபா’ ’அண்ணாமலை’ உள்ளிட்ட பல திரைப்படங்களில் சரத்பாபு நடித்துள்ளார். கமல் ரஜினி படங்களில் மட்டும் இன்றி ஹீரோவாகவும் அவர் ஒரு சில படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
சிறந்த நடிகரும், அருமை நண்பருமான சரத்பாபு மறைந்துவிட்டார். அவருடன் இணைந்து நடித்த நாட்கள் என் மனதில் நிழலாடுகின்றன. தமிழில் என் குருநாதரால் அறிமுகப்படுத்தப்பட்டவர். காலத்தால் அழியாத பல பாத்திரங்களை ஏற்று சிறப்பு செய்தவர். ஒரு நல்ல நடிகரை சினிமா இழந்திருக்கிறது.
— Kamal Haasan (@ikamalhaasan) May 22, 2023
அவருக்கு என்…
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments