யாருக்கோ சாமரம் வீசுகிறது தமிழக அரசு: கமல்ஹாசன்
Send us your feedback to audioarticles@vaarta.com
உத்தரபிரதேச மாநிலத்தில் இருந்து கடந்த சில வாரங்களுக்கு முன் கிளம்பிய ராமராஜ்ய ரதயாத்திரை, அதன்பின்னர் மகாராஷ்டிரா, கர்நாடகம், கேரளம் உள்பட ஐந்து மாநிலங்கள் வழியாக எந்தவித பிரச்சனையும் இல்லாமல் பயணம் செய்தது. ஆனால் இன்று அந்த ரதயாத்திரை தமிழகத்தில் நுழையவுள்ளதாக செய்திகள் வெளிவந்ததை அடுத்து இந்த ரத யாத்திரையால் சட்டம் ஒழுங்கு தமிழகத்தில் கெட்டுவிடும் என்று அரசியல் கட்சிகள் வலியுறுத்தின. இதனையடுத்து நெல்லை மாவட்டத்தில் நேற்று முதல் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இந்த நிலையில் இன்று காலை தமிழக எல்லையில் ரதம் நுழைந்தபோது அதற்கு எதிர்ப்பு தெரிவித்து பல அரசியல் கட்சி தலைவர்களும், தொண்டர்களும் கைதானார்கள். இன்னும் நெல்லை மாவட்டத்தில் ஒருவித பதட்ட நிலை நிலவி வருகிறது.
இந்த நிலையில் இதுகுறித்து நடிகர் கமல்ஹாசன் தனது சமூக வலைத்தளத்தில் கூறியதாவது: சமூக நல்லிணக்கத்திற்காக எழும் நியாயமான குரல்களுக்கு 144 தடை உத்திரவு, கைது. அரசியல் நோக்கத்துடன் மக்களைப் பிளவுபடுத்தும் ஊர்வலத்திற்கு அனுமதி. மக்கள் மனதைப் பிரதிபலிக்காமல், மாநிலமெங்கும் தேர்வு எழுதக்காத்திருக்கும் மாணவர்களையும் மதியாமல் யாருக்கோ சாமரம் வீசுகிறது தமிழக அரசு' என்று கூறியுள்ளார்.
கமல்ஹாசனின் இந்த பதிவிற்கு ஆதரவும் எதிர்ப்பும் மாறி மாறி சமூக வலைத்தள பயனாளிகளிடம் இருந்து கிடைத்து வருகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout