'சபாஷ் ரஜினி'! கமல் வாழ்த்து டுவீட்
Send us your feedback to audioarticles@vaarta.com
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் இன்று செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியின்போது பாஜகவையும் மத்திய அரசையும் கடுமையாக தாக்கினார் என்பது குறித்து ஏற்கனவே பார்த்தோம். மத்திய அரசின் உளவுப் பிரிவின் தோல்விதான் டெல்லி வன்முறைக்கு காரணம் என்றும், மதத்தை வைத்து அரசியல் செய்வதை தான் விரும்பவில்லை என்றும், தான் பாஜகவின் ஆள் இல்லை என்றும், இந்த வன்முறையை கட்டுப்படுத்த தவறிய மத்திய அரசை வன்மையாக கண்டிப்பதாகவும் தெரிவித்தார்.
மேலும் தன்னை பாஜகவின் ஆள் என்று சொல்வது மிகவும் வருத்தமாக இருப்பதாகவும் இனிமேல் யாரும் அவ்வாறு சொல்ல வேண்டாம் என்றும் அவர் கேட்டுக்கொண்டார். ரஜினியின் இந்த பேட்டியை இதற்கு முந்தைய போட்டிகளில் இருந்து முற்றிலும் வித்தியாசமாக இருந்ததை பார்த்து அனைவரும் ஆச்சரியம் அடைந்தனர்.
இந்த நிலையில் ரஜினியின் நெருங்கிய நண்பரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமலஹாசன் இதுகுறித்து தனது சமூக வலைத்தளத்தில் ’ரஜினிக்கு ஆதரவாக ஒரு கருத்தை தெரிவித்துள்ளார். அவர் இதுகுறித்து கூறியதாவது: சபாஷ் நண்பர் ரஜினிகாந்த் அவர்களே, அப்படி வாங்க. இந்த வழி நல்ல வழி. தனி வழி அல்ல, ஒரு இனமே நடக்கும் ராஜ பாட்டை. வருக, வாழ்த்துக்கள்’ என்று கூறியுள்ளார்.
ஆனால் கமலின் இந்த கருத்துக்கு ரஜினி ரசிகர்கள் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
சபாஷ் நண்பர் @rajinikanth அவர்களே, அப்படி வாங்க.
— Kamal Haasan (@ikamalhaasan) February 26, 2020
இந்த வழி நல்ல வழி.
தனி வழி அல்ல, ஒரு இனமே நடக்கும் ராஜ பாட்டை.
வருக, வாழ்த்துக்கள்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com