ராணி எலிசபெத் கலந்து கொண்ட ஒரே திரைப்பட விழா; கமல்ஹாசன் பெருமிதம்

இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத்தின் நேற்று காலமான நிலையில் அவருக்கு உலக தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் கமல்ஹாசனின் ’மருதநாயகம்’ திரைப்படத்தின் தொடக்க விழாவில் கலந்து கொண்டு அவருக்கு வாழ்த்து தெரிவித்த இங்கிலாந்து ராணியின் மறைவுக்கு தனது இரங்கலை கமல்ஹாசன் சமூக வலைதளப் பக்கத்தில் தெரிவித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:

எழுபதாண்டுகளாக இங்கிலாந்தின் மகாராணியாக திகழ்ந்த இரண்டாம் எலிசபெத் இயற்கை எய்திய செய்தியைக் கேட்டு துயருற்றேன். ஆங்கிலேயர்கள் மட்டுமல்லாது, அகில உலகத்தவரின் நேசத்தையும் பெற்றவராக அவர் விளங்கினார்.

25 ஆண்டுகளுக்கு முன்னர் எங்களது அழைப்பை ஏற்று மருதநாயகம் திரைப்படத்தின் தொடக்கவிழாவில் கலந்துகொண்டு வாழ்த்தினார். அனேகமாக அவர் கலந்து கொண்ட ஒரே திரைப்பட படப்பிடிப்பு அதுதான்.

5 ஆண்டுகளுக்கு முன்னர் லண்டனில் நடந்த கலாச்சார நிகழ்வில் அரண்மனையில் அவரை சந்தித்துப் பேசியது இன்னமும் பசுமையாக நினைவிருக்கிறது. தங்கள் பிரியத்திற்குரிய ராணியை இழந்து வாடும் இங்கிலாந்து மக்களுக்கும், அரச குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்
 

More News

'சூர்யா 42' படம் உருவாகும் டெக்னாலஜி: மோஷன் போஸ்டரில் அசத்தல் தகவல்

சூர்யா நடிப்பில், சிறுத்தை சிவா இயக்கத்தில், ஞானவேல் ராஜா தயாரிப்பில் உருவாகி வரும் திரைப்படம் 'சூர்யா 42'. இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வரும்

'பொன்னியின் செல்வன்' நந்தினி ஐஸ்வர்யா ராய்க்கு டப்பிங் கொடுத்தது இந்த பிரபலமா?

 மணிரத்னம் இயக்கத்தில் லைகா நிறுவனத்தின் சுபாஷ்கரன் தயாரிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'பொன்னியின் செல்வன்'. இந்த படம் வரும் 30ஆம் தேதி பிரமாண்டமாக உலகம் முழுவதும் தமிழ் உள்பட 5

'என்னால் அழாமல் பதில் சொல்ல முடியுமா என தெரியவில்லை: விஜய்காந்த் குறித்து பிரேமலதா உருக்கம்!

விஜயகாந்த் உடல்நிலை குறித்த கேள்விக்கு என்னால் அழாமல் பதில் சொல்ல முடியுமா என்று தெரியவில்லை என பிரேமலதா பேட்டி ஒன்றில் கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தனியார் ஊடகம்

'ஹே சினாமிகா இயக்குனர் பிருந்தாவின் அடுத்த படம்: 'தக்ஸ்' கதாபாத்திர அறிமுக விழா

'ஹே சினாமிகா' என்ற படத்தை இயக்கிய பிரபல நடன இயக்குனர் பிருந்தா இயக்கத்தில் HR Pictures சார்பில் ரியா சிபு தயாரிப்பில், உருவாகி இருக்கும் "தக்ஸ்" திரைப்படத்தின் கதாபாத்திர

நயன்தாரா நடித்த திரைப்படத்தை பார்த்த விக்னேஷ் சிவன்: படக்குழுவினர்களுக்கு வாழ்த்து!

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா முக்கிய வேடத்தில் நடித்த திரைப்படத்தை பார்த்து விக்னேஷ் சிவன் பாராட்டு தெரிவித்துள்ளார்