பிரதமரின் ரூ.20 லட்சம் கோடி அறிவிப்பு குறித்து கமல்ஹாசன் கருத்து
- IndiaGlitz, [Wednesday,May 13 2020]
பாரத பிரதமர் நரேந்திர மோடி நேற்று நாட்டு மக்களிடையே உரையாற்றும்போது, ‘இந்தியாவின் பொருளாதார தேக்க நிலையை சரிசெய்ய 20 லட்சம் கோடிக்கு சிறப்பு திட்டங்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும், நிதித்துறை அமைச்சர் இந்த பொருளாதார மீட்டமைப்பு திட்டம் குறித்து தெளிவாக விவரிப்பார் என்றும், நடுத்தர குடும்பங்கள் இந்த திட்டத்தின் மூலம் பயனடைவார்கள் என்றும் தெரிவித்தார்.
பிரதமரின் இந்த அறிவிப்பு குறித்து அரசியல் தலைவர்கள், சமூக ஆர்வலர்கள், நெட்டிசன்கள் ஆகியோர் பல்வேறு விதமாக கருத்துக்களை தெரிவித்து வரும் நிலையில் நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் இதுகுறித்து கூறியதாவது:
உணவின்றி அழும் குழந்தைக்கும், பணமின்றி தவிக்கும் ஏழைக்கும், இப்போதேனும் அறிவித்திருக்கும் பிரதமரின் திட்டத்தை வரவேற்கிறோம். அதேநேரம் நடுத்தர, அடித்தட்டு ஏழை மக்களுக்கும் இத்திட்டம் பலனளிக்குமா? காலத்தே கிடைக்குமா என நான் மட்டுமல்ல ஒட்டுமொத்த நாடும் கவனித்துக் கொண்டிருக்கிறது’ என்று தெரிவித்துள்ளார்.
கமல்ஹாசனின் இந்த டுவீட் குறித்து, ‘அறிவிக்க போகும் திட்டத்திற்கு பாராட்டு எனும் ஒரு கொட்டு, அதேநேரம் இத்திட்டம் ஏழைகள் நடுத்தர மக்களுக்கு பலன் அளிக்குமா? அதுவும் குறித்த காலத்தில் கிடைக்குமா? எனும் ஒரு கொட்டு என ஆளும் அரசாங்கத்தின் குறை நிறைகளை சரியாக கமல்ஹாசன் விமர்சனம் செய்துள்ளதாக நெட்டிசன்கள் கமெண்ட் அளித்து வருகின்றனர்.
உணவின்றி அழும் குழந்தைக்கும், பணமின்றி தவிக்கும் ஏழைக்கும், இப்போதேனும் அறிவித்திருக்கும் பிரதமரின் திட்டத்தை வரவேற்கிறோம்.
— Kamal Haasan (@ikamalhaasan) May 13, 2020
அதேநேரம் நடுத்தர, அடித்தட்டு ஏழை மக்களுக்கும் இத்திட்டம் பலனளிக்குமா? காலத்தே கிடைக்குமா என நான் மட்டுமல்ல ஒட்டுமொத்த நாடும் கவனித்துக் கொண்டிருக்கிறது.