கடன் கட்ட அவகாசம் தந்துவிட்டு வட்டி போடுவதா? கமல்ஹாசன்

  • IndiaGlitz, [Saturday,August 01 2020]

கொரோனா வைரஸ் காரணமாக கடந்த நான்கு மாதங்களுக்கும் மேல் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் நாட்டின் அனைத்து பகுதிகளிலும் கோடிக்கணக்கானோர் வேலையிழந்து, வருமானம் இழந்து பெரும் சிக்கலில் உள்ளனர். இந்த நிலையில் இ.எம்.ஐ மூலம் வாகனக்கடன், தனிநபர் கடன் உள்ளிட்ட கடன் வாங்கியவர்களுக்கு கடன் கட்ட அவகாசம் அளிக்கப்பட்டிருந்தாலும், கட்டாத தொகைக்கு வட்டி போடுவதால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்தில் உள்ளனர்.

இந்த நிலையில் இதுகுறித்து உலக நாயகன் நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் தனது டுவிட்டர் பக்கத்தில் தனது கருத்தை ஆவேசமாக தெரிவித்துள்ளார். அவர் இதுகுறித்து கூறியதாவது:

புகைப்படக்கலைஞர்கள், டாக்ஸி வேன் ஓட்டுநர் என 20 லட்சம் பேர் வருமானமின்றி, வாழ்வாதாரம் இழந்து தவிக்கின்றனர். கடன் கட்ட அவகாசம் தந்து விட்டு, அதற்கும் வட்டி போட்டு சுமையேற்றப்படுகிறது. மன அழுத்தத்தில் இருக்கும் அவர்களை காக்க எம் தொழிலாளரணி முனைந்துள்ளது. அரசின் உதவியும் அவசியம்

கமல்ஹாசனின் இந்த பதிவுக்கு லைக்ஸ்களும் கமெண்ட்டுக்களும் குவிந்து வருகிறது. குறிப்பாக ‘டாக்ஸி ஓட்டுனர்கள், புகைப்பட கலைஞர்கள் பற்றி எந்த கட்சியும் சிந்தித்ததாக தெரியவில்லை. ஆட்சியில் இல்லாமலேயே என்றும் மக்கள் நலன் எனும் சிந்தனையில் நம்மவர். ஆட்சிக்கு வந்தால்?? என்று கேள்விக்குறியுடன் கமெண்ட்டை ஒருவர் பதிவு செய்துள்ளார்.

இதுகுறித்து மக்கள் நீதி மய்யம் கட்சியின் தொழிலாளர் அணி கூறியபோது, ‘தேசத்தின் முதுகெலும்பாக திகழும் தொழிலாளர்கள் நலன் காத்திட நம் மக்கள் நீதி மய்யத்தின் தொழிலாளர் அணி புறப்பட்டு விட்டது எங்கெல்லாம் அவர்களுக்கு அநீதி இழைக்கப்படுகிறதோ அங்கே தொழிலாளர்களின் உரிமைக் குரலாக ஓங்கி ஒலிப்போம். கமல்ஹாசன் அவர்களது வழிகாட்டுதலில் அவர்களின் உரிமைகளை மீட்டெடுப்போம்’ என்று கூறியுள்ளது
 

More News

சென்னை தனியார் மருத்துவமனையின் கொரோனா சிகிச்சை அனுமதி ரத்து: அதிர்ச்சி காரணம்

சமீபத்தில் தனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சை கட்டணம் குறித்து ஐ.எம்.ஏ தனது பரிந்துரைகளை தெரிவித்து இருந்தது. அதன்படி லேசான பாதிப்புள்ள நோயாளிக்கு 10 நாட்கள் சிகிச்சை

ஸ்மார்ட்போன் கூட வாங்க முடியாத மாணவிக்கு ஐபோன் அனுப்பிய தமிழ் நடிகை!

நீட் தேர்வுக்கு தயார் செய்ய ஸ்மார்ட்போன் கூட வாங்க முடியாமல் கஷ்டப்பட்ட மாணவி ஒருவருக்கு தமிழ் நடிகை ஒருவர் ஐபோன் வாங்கி கொடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

நடுவானில் மோதிக்கொண்ட இரு விமானங்கள்… 7 பேர் உயிரிழப்பு மற்றும் பரபரப்பு சம்பவம்!!!

அமெரிக்காவின் அலாஸ்கா மாகாணம் அருகே இரு விமானங்கள் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் அம்மாகாண உறுப்பினர் உட்பட 7 பேர் உயிரிழந்தனர்.

போதையில் தாய்ப்பால் கொடுத்ததால் இறந்த குழந்தை: நீதிமன்றத்தின் வினோதமான தீர்ப்பு

பீர் குடித்துவிட்டு போதையில் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்ததால் குழந்தை இறந்த வழக்கில் 20 வருட சிறை தண்டனை பெற்ற பெண், மேல் முறையீட்டு மனு செய்திருந்த

ஒபாமா உள்ளிட்ட பிரபலங்களின் டிவிட்டரை ஹேக் செய்தது ஒரு சிறுவனா??? தொடரும் பரபரப்பு!!!

கடந்த மாதம் 24 ஆம் தேதியன்று பிற்பகலில் உலகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தும் ஒரு சம்பவம் நிகழ்ந்தது.