மக்களுக்கு அரசு செய்யும் துரோகம் இது: கமல்ஹாசன் ஆவேசம்
- IndiaGlitz, [Monday,May 04 2020]
உலக நாயகன் நடிகர் கமல்ஹாசன் அவ்வப்போது தனது சமூக வலைத்தள பக்கத்தில் அரசுக்கு எதிரான கருத்துக்களை ஆவேசமாக தெரிவித்து வருகிறார் என்பதும் இந்த கருத்துக்கள் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது என்பதும் தெரிந்ததே
இந்த நிலையில் இன்று முதல் பெட்ரோல், டீசலுக்கான மதிப்பு கூட்டு வரியை தமிழக அரசு உயர்த்தியுள்ளது. எனவே இன்று முதல் தமிழகத்தில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.3.25 காசும், டீசல் லிட்டருக்கு ரூ.2.50 காசுகளும் உயர்ந்துள்ளது. பெட்ரோல், டீசல் விலையால் வாகன ஓட்டிகள் மட்டுமின்றி அத்தியாவசிய பொருட்களின் விலையும் உயரும் அபாயம் உள்ளது. இந்த நிலையில் இதுகுறித்து கமல்ஹாசன் தனது சமூக வலைத்தளத்தில் கூறியிருப்பதாவது:
உலகமெங்கும் பெட்ரோல், டீசல் விலை குறைந்திருக்கும் வேளையில், அவை மீது மதிப்பு கூட்டு வரி உயர்வு என்பது அத்தியாவசிய பொருட்களின் விலையை உயர்த்தும் என்பதை அறிந்திருந்தும், 40 நாட்களாக மக்கள் வேலையின்றி, வருமானமின்றி தவிக்கும் நிலையில், இதை செய்வது மக்களுக்கு அரசு செய்யும் துரோகம். கமல்ஹாசனின் இந்த டுவீட்டுக்கு பொதுமக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது
உலகமெங்கும் பெட்ரோல், டீசல் விலை குறைந்திருக்கும் வேளையில், அவை மீது மதிப்பு கூட்டு வரி உயர்வு என்பது அத்தியாவசிய பொருட்களின் விலையை உயர்த்தும் என்பதை அறிந்திருந்தும், 40 நாட்களாக மக்கள் வேலையின்றி, வருமானமின்றி தவிக்கும் நிலையில், இதை செய்வது மக்களுக்கு அரசு செய்யும் துரோகம்.
— Kamal Haasan (@ikamalhaasan) May 4, 2020