தேர்தல் முடிந்ததும் பசுத்தோல் உதிர்ந்துவிட்டது: கமல்ஹாசன்
- IndiaGlitz, [Wednesday,March 23 2022]
தேர்தல் முடிந்ததும் பசுத்தோல் உதிர்ந்து விட்டது என கமல்ஹாசன் தனது டுவிட்டரில் பதிவு செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை கடந்த சில மாதங்களாக உயர்ந்து வந்த போதிலும் இந்தியாவில் மட்டும் மூன்று மாதங்களுக்கும் மேலாக பெட்ரோல், டீசல் விலை உயரவில்லை என்பது தெரிந்ததே. இந்த நிலையில் ஐந்து மாநில தேர்தல் முடிவடைந்து முடிவுகள் அறிவிக்கப்பட்ட சில நாட்களில் தற்போது பெட்ரோல் டீசல் மற்றும் சமையல் கேஸ் விலை உயர்ந்துவிட்டது. நேற்றும் இன்றும் பெட்ரோல் டீசல் விலையை தினமும் 75 காசுகள் உயர்த்தப்பட்டது என்பதும், சமையல் கியாஸ் விலை 50 ரூபாய் உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் இந்த விலை உயர்வுக்கு உலக நாயகனும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமலஹாசன் தனது டுவிட்டரில், ‘தேர்தல் முடிந்தவிட்டதும் பசுத்தோல் உதிர்ந்துவிட்டது; என தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது:
தேர்தல்கள் முடிந்தன. இதோ பசுத்தோல் உதிர்ந்துவிட்டது. பெட்ரோல், டீசல், கியாஸ் விலை உயர்வு தொடங்கிவிட்டது. கச்சா எண்ணெய் விலை உயர்வு என்பார்கள். ஆனால் அது கீழே இறங்கியபோதும் விலையைக் குறைக்கவில்லை இவர்கள். அதில் சேர்த்த லட்சம் கோடிகளை வைத்து இப்போது சரிக்கட்டலாமே...

— Kamal Haasan (@ikamalhaasan) March 23, 2022