பெரியார் சிலையை அகற்ற தயார், ஆனால்...கமல்ஹாசன்
Send us your feedback to audioarticles@vaarta.com
தமிழக ஊடகங்களுக்கு இன்றைய பரபரப்பான செய்தியே எச்.ராஜாவின் பெரியார் சிலை குறித்த ஃபேஸ்புக் பதிவுதான். கடும் எதிர்ப்பு காரணமாக அவர் தனது பதிவை நீக்கிவிட்டாலும் அவர் பற்ற வைத்த நெருப்பு இன்னும் அணையாமல் சமூக வலைத்தளங்களில் கொளுந்துவிட்டு எரிந்து வருகிறது.
இந்த நிலையில் பெரியார் சிலை அகற்றம் குறித்து சற்றுமுன் கமல்ஹாசன் கூறியதாவது: அன்பார்ந்த ஸ்டாலின், வை.கோ, திருமாவளவன், சீமான். வீணாகத் தங்கள் பேச்சாற்றலை விழலுக்கிரைக்க வேண்டாம். எல்லாச் சிலைகளையும் அகற்றும் வாக்குறுதியை அவர் தந்தால் நாம் நம் மூதாதையார் பெரியார் சிலையை அகற்ற அனுமதிப்போம். வழிபடுதல் வேறு வழிநடப்பது வேறு' என்று கூறியுள்ளார்.
கமல்ஹாசனின் இந்த டுவீட்டை பார்த்த ஒருசிலர், எல்லா சிலைகளையும் என்றால் கடவுள் சிலையுமா? என்று குதர்க்கமாக கேள்வி எழுப்பி வருகின்றனர். இருப்பினும் கமல், பாரதிய ஜனதாவுக்கு மறைமுகமாக ஆதரவு கொடுப்பதாக கூறப்பட்டு வந்த வதந்திக்கு இந்த டுவீட் முற்றுப்புள்ளி வைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அன்பார்ந்த ஸ்டாலின், வை.கோ, திருமாவளவன், சீமான். வீணாகத் தங்கள் பேச்சாற்றலை விழலுக்கிரைக்கவேண்டாம். எல்லாச் சிலைகளையும் அகற்றும் வாக்குறுதியை அவர் தந்தால் நாம் நம் மூதாதையார் பெரியார் சிலையை அகற்ற அனுமதிப்போம்.வழிபடுதல் வேறு வழிநடப்பது வேறு
— Kamal Haasan (@ikamalhaasan) March 6, 2018
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Contact at support@indiaglitz.com
Comments