பெரியாரே வந்தாலும் இனி வெங்காயம் என வையார்: கமல்ஹாசன் டுவீட்

  • IndiaGlitz, [Thursday,October 22 2020]

தெலுங்கானா மாநிலத்தில் திடீரென பெய்த கனமழை காரணமாக அம்மாநிலத்தில் இருந்து தமிழகத்துக்கு வர வேண்டிய வெங்காய வரத்து முற்றிலும் நின்று போனது. இதனால் கடந்த சில நாட்களாக வெங்காயத்தின் விலை தமிழகத்தில் படிப்படியாக ஏறி தற்போது கிட்டத்தட்ட நூறு ரூபாய்க்கு நெருங்கிவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது

இருப்பினும் தமிழக அரசு இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுத்து வெளிநாட்டில் இருந்து வெங்காயத்தை இறக்குமதி செய்து வருகிறது. எனவே இன்னும் ஓரிரு நாளில் ஒரு கிலோ வெங்காயம் ரூ.50க்கும் குறைவாக விற்பனையாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

இந்நிலையில் வழக்கம்போல் வெங்காயம் விலையை வைத்து அரசியல்வாதிகள் அரசியல் செய்து வருகின்றனர். ஏற்கனவே ஒருசில அரசியல் கட்சி தலைவர்கள் இதுகுறித்து டுவிட்டரில் கருத்து தெரிவித்த நிலையில் தற்போது வெங்காய விலை குறித்து கமல்ஹாசன் தனது டுவிட்டரில் ஒரு டுவிட்டை பதிவு செய்துள்ளார்: அதில் அவர் கூறியிருப்பதாவது

பெரியாரே வந்தாலும் இனி வெங்காயம் என வையார்.

விண்ணில் பறக்கும் வெங்காய விலை பார்த்து நம் அன்னைமார்களும் இனி சமையலில் அதை வையார்.

விலையிறங்குவாயா வெங்காயமே?