நெல் ஜெயராமன் மறைவு: கமல்ஹாசன் இரங்கல்
- IndiaGlitz, [Thursday,December 06 2018]
கடந்த 22 ஆண்டுகளில் 174 வகை பாரம்பரிய நெல் வகைகளை சேகரித்து அவற்றை மறு உற்பத்தி செய்து சாதனை புரிந்த இயற்கை விவசாயி நெல் ஜெயராமன் இன்று அதிகாலை காலமானார். அவரது மறைவிற்கு அரசியல் கட்சி தலைவர்களும், திரையுலகை சேர்ந்தவர்களும் விவசாய சங்கத்தின் நிர்வாகிகளும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் விவசாயிகளுக்கும் அவர்களுடைய போராட்டத்திற்கும் தொடர்ந்து ஆதரவு கொடுத்து வரும் நடிகரும் மக்கள் நீதி கட்சியின் தலைவருமான கமல்ஹாசன், நெல் ஜெயராமனின் மறைவிற்கு தனது சமூக வலைத்தளத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது:
தமிழர்களின் மரபும் வரலாறும் உணவுடன் உறவாடிக்கிடந்ததை உணர்ந்து, அதை மீட்டெடுத்து பாதுகாத்த திரு. நெல்.ஜெயராமன் அவர்களின் மறைவு நம் அனைவருக்கும் பேரிழப்பு. அவர் பாதுகாத்திட்ட பாரம்பரிய நெல் போல அவரின் சிந்தனையையும் செயலையும் நாம் ஒவ்வொருவரும் பாதுகாத்திட வேண்டும் என்று கமல்ஹாசன் கூறியுள்ளார்.
தமிழர்களின் மரபும் வரலாறும் உணவுடன் உறவாடிக்கிடந்ததை உணர்ந்து, அதை மீட்டெடுத்து பாதுகாத்த திரு. நெல்.ஜெயராமன் அவர்களின் மறைவு நம் அனைவருக்கும் பேரிழப்பு. அவர் பாதுகாத்திட்ட பாரம்பரிய நெல் போல அவரின் சிந்தனையையும் செயலையும் நாம் ஒவ்வொருவரும் பாதுகாத்திட வேண்டும்.
— Kamal Haasan (@ikamalhaasan) December 6, 2018