வறுமையின் நிறம் சிவப்பு அல்ல: கமல்ஹாசன் டுவிட்
- IndiaGlitz, [Wednesday,July 14 2021]
நாட்டின் சுதந்திரத்திற்காகவும், உழைக்கும் மக்களின் உரிமைக்காகவும் போராடி எட்டு ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்து, 80 ஆண்டுகள் மக்கள் பணி செய்து இன்றைக்கும் எளிய வாழ்க்கை வாழ்ந்து வரும் கம்யூனிஸ்ட் கட்சியின் என் சங்கரையா அவர்கள் நாளை அதாவது ஜூலை 15ஆம் தேதி 100 வது பிறந்த நாளை கொண்டாடவுள்ளார்.
இந்தியாவில் வாழ்ந்து கொண்டிருக்கும் மிகச் சில சுதந்திர போராட்ட வீரர்களில் ஒருவர் என்.சங்கரையா அவர்கள்.. வெள்ளையர்களின் ஆட்சியை எதிர்த்து, பொது வெளியிலும், சிறையிலிருந்தும், தலைமறைவாகவும் அவர் புரிந்த போராட்டங்கள் பல.
அத்தகையை பெருமைக்குரிய என்.சங்கரய்யா அவர்களின் 100வது பிறந்த நாளுக்கு உலக நாயகன் நடிகர் கமல்ஹாசன் தனது டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் தனது வாழ்த்தில் கூறியிருப்பதாவது:
’வறுமையின் நிறம் சிவப்பு அல்ல; வறுமையைப் போக்க வந்த நிறமே சிவப்பு’ என முழங்கிய தோழர் என்.சங்கரய்யா 100-வது வயதில் அடியெடுத்து வைக்கிறார். விடுதலைப்போர் துவங்கி இன்று வரை நீளும் நெடிய போராட்ட வரலாற்றினைக் கொண்ட முன்னுதாரண தோழருக்கு என் வந்தனங்களும் வாழ்த்துக்களும்.
ஏற்கனவே கடந்த சில நாட்களுக்கு முன் என்.சங்கரய்யா அவர்களின் 100வது பிறந்த நாளுக்கு இயக்குனர் பாரதிராஜா வாழ்த்து தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
’வறுமையின் நிறம் சிவப்பு அல்ல; வறுமையைப் போக்க வந்த நிறமே சிவப்பு’ என முழங்கிய தோழர் என்.சங்கரய்யா 100-வது வயதில் அடியெடுத்து வைக்கிறார். விடுதலைப்போர் துவங்கி இன்று வரை நீளும் நெடிய போராட்ட வரலாற்றினைக் கொண்ட முன்னுதாரண தோழருக்கு என் வந்தனங்களும் வாழ்த்துக்களும்.
— Kamal Haasan (@ikamalhaasan) July 14, 2021