காந்தி பிறந்த நாளில் மகளின் பாடலை பதிவு செய்த கமல்ஹாசன்!
Send us your feedback to audioarticles@vaarta.com
தேசத்தந்தை மகாத்மா காந்தியின் பிறந்த நாள் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. டெல்லியில் உள்ள காந்தி சமாதியில் பிரதமர் மோடி உள்பட முக்கிய தலைவர்கள் இன்று சிறப்பு அஞ்சலி செலுத்தினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அதே போல் சென்னையிலும் காந்தி பிறந்த நாள் விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் காந்தி பிறந்த நாளை முன்னிட்டு தன்னுடைய மகள் அக்ஷராஹாசன் பாடிய பாடலை தனது டுவிட்டரில் பதிவு செய்துள்ள கமலஹாசன் இதுகுறித்து கூறியதாவது:
பாருக்குள்ளே நல்ல நாடுதான்...
நம்பியதில் பிசகில்லை.
நாட்டை நாசமாக்கும் நயவஞ்சகர்களை அகற்றிவிட்டால்,
நாளைய குழந்தைகளேனும் எங்கள் பாரத தேசம் என்று தோள் கொட்டும்.
ஜெய்ஹிந்த்!
என்று கமல் குறிப்பிட்டுள்ளார்.
கமல்ஹாசனின் மகள் அக்ஷராஹாசன் குழந்தையாக இருக்கும் போது பாடிய ’ஜாரே ஜஹாங்கே அச்சா’ என்ற பாடலை கமல்ஹாசன் தனது டுவிட்டரில் பதிவு செய்துள்ளார் என்பதும் அந்த பாடல் தற்போது வைரலாகி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
’அக்சராஹாசன் குழந்தையாக இருக்கும் போது எனக்காக பாடிய பாடலை நான் மீண்டும் நினைவு கொள்கிறேன். அனைத்து இந்தியர்களும் இந்த மிகப்பெரிய மனிதரின் கொள்கையை பின்பற்ற நாம் அழைப்பு விடுப்போம். சமத்துவம் நிலவும் இந்தியாவை உருவாக்குவோம்’ என்று கமல்ஹாசன் கூறியுள்ளார்.
Happy Bday to Mr. MK Gandhi. Sharing what @Iaksharahaasan had sung for me when she was a child. Calling all Indians to remember the great man whose life was his message to us! Let’s make India a place where Equality prevails-sare jahan se achcha, Gandhi’s India can still be ours!
— Kamal Haasan (@ikamalhaasan) October 2, 2020
பாருக்குள்ளே நல்ல நாடுதான்...
— Kamal Haasan (@ikamalhaasan) October 2, 2020
நம்பியதில் பிசகில்லை.
நாட்டை நாசமாக்கும் நயவஞ்சகர்களை அகற்றிவிட்டால்,
நாளைய குழந்தைகளேனும் எங்கள் பாரத தேசம் என்று தோள் கொட்டும்.
ஜெய்ஹிந்த்! pic.twitter.com/KAPqv9Nmt8
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments