காந்தி பிறந்த நாளில் மகளின் பாடலை பதிவு செய்த கமல்ஹாசன்!

  • IndiaGlitz, [Friday,October 02 2020]

தேசத்தந்தை மகாத்மா காந்தியின் பிறந்த நாள் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. டெல்லியில் உள்ள காந்தி சமாதியில் பிரதமர் மோடி உள்பட முக்கிய தலைவர்கள் இன்று சிறப்பு அஞ்சலி செலுத்தினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அதே போல் சென்னையிலும் காந்தி பிறந்த நாள் விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் காந்தி பிறந்த நாளை முன்னிட்டு தன்னுடைய மகள் அக்ஷராஹாசன் பாடிய பாடலை தனது டுவிட்டரில் பதிவு செய்துள்ள கமலஹாசன் இதுகுறித்து கூறியதாவது:

பாருக்குள்ளே நல்ல நாடுதான்...
நம்பியதில் பிசகில்லை.

நாட்டை நாசமாக்கும் நயவஞ்சகர்களை அகற்றிவிட்டால்,
நாளைய குழந்தைகளேனும் எங்கள் பாரத தேசம் என்று தோள் கொட்டும்.
ஜெய்ஹிந்த்!

என்று கமல் குறிப்பிட்டுள்ளார்.

கமல்ஹாசனின் மகள் அக்ஷராஹாசன் குழந்தையாக இருக்கும் போது பாடிய ’ஜாரே ஜஹாங்கே அச்சா’ என்ற பாடலை கமல்ஹாசன் தனது டுவிட்டரில் பதிவு செய்துள்ளார் என்பதும் அந்த பாடல் தற்போது வைரலாகி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

’அக்சராஹாசன் குழந்தையாக இருக்கும் போது எனக்காக பாடிய பாடலை நான் மீண்டும் நினைவு கொள்கிறேன். அனைத்து இந்தியர்களும் இந்த மிகப்பெரிய மனிதரின் கொள்கையை பின்பற்ற நாம் அழைப்பு விடுப்போம். சமத்துவம் நிலவும் இந்தியாவை உருவாக்குவோம்’ என்று கமல்ஹாசன் கூறியுள்ளார்.

More News

விஜயகாந்த், பிரேமலதா டிஸ்சார்ஜ் எப்போது? மருத்துவமனையின் அறிக்கை! 

நடிகரும் தேமுதிக நிறுவன தலைவருமான விஜயகாந்த் மற்றும் அவருடைய மனைவி பிரேமலதா விஜயகாந்த் ஆகிய இருவரும் சமீபத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு தனியார்

ரஜினியின் முயற்சிக்கு துணையாக இருப்போம்: பிரபல அரசியல்வாதி!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் கடந்த 2017ம் ஆண்டு தான் அரசியலில் குதிக்க இருப்பதாகவும் புதிய அரசியல் கட்சி ஆரம்பித்து வரும் 2021 ஆம் ஆண்டு நடைபெறும் சட்டமன்ற தேர்தலில்

ஆர்ஜே அர்ச்சனாவுக்கு ஏற்பட்ட திடீர் சிக்கல்: பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்வாரா?

உலகநாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்க உள்ள பிக்பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசன் இன்னும் இரண்டு நாட்களில் தொடங்க உள்ளது என்பது தெரிந்ததே

ஒரு பைசா கூட காசு வாங்காமல் 75 ஆண்டுகளாக கல்வி கற்றுக்கொடுக்கும் முதியவர்!!!

பணமே வாங்காமல் தனது சொந்த கிராம மக்களுக்காக ஒடிசாவில் முதியவர் ஒருவர் 75 ஆண்டுகளாக,

சென்னையில் கொரோனா தனிமையில் இருந்தவரின் வீட்டில் 250 சரவன் தங்கம் கொள்ளை!!!

சென்னையில் திநகர் அடுத்த பாண்டிபஜார் பகுதியில் குடும்பத்துடன் வசித்து வந்தவர் நூருல் ஹக்(71).