பருவநிலை மாற்றத்தின் காரணமாக இயற்கைப் பேரிடர்கள்: நிலச்சரிவு குறித்து கமல்ஹாசன்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
கேரள மாநிலம் வயநாடு பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவு நாடு முழுவதையும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது என்பதும் 70-க்கும் மேற்பட்டோர் இதுவரை உயிரிழந்துள்ளதாக கூறப்படும் நிலையில் இன்னும் ஏராளமானோர் உயிரிழந்திருக்க வாய்ப்பு இருப்பதாக அச்சம் தரும் செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.
இந்த நிலையில் மீட்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில் இந்த சம்பவத்திற்கு இரங்கல் தெரிவித்து அரசியல் கட்சி பிரமுகர்கள், திரையுலக பிரமுகர்கள், தங்களது சமூக வலைதளத்தில் பதிவு செய்து வருகின்றனர். குறிப்பாக சில மணி நேரங்களுக்கு முன்னர் நடிகரும் தமிழக வெற்றி கழகத்தின் தலைவருமான விஜய் தனது சமூக வலைத்தளத்தில் செய்த பதிவை பார்த்தோம். இந்த நிலையில் உலக நாயகன் மற்றும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் இந்த சம்பவம் குறித்து கூறியிருப்பதாவது:
கேரள மாநிலம் வயநாடு பகுதியிலும், வால்பாறையிலும் நிலச்சரிவினால் ஏற்பட்ட பேரழிவுகள் என் நெஞ்சைப் பதற வைக்கின்றன. தங்களது அன்புக்குரியவர்களையும், வீடு வாசல், உடைமைகளையும் இழந்து தவிக்கும் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கல்கள்.
பருவநிலை மாற்றத்தின் காரணமாக இயற்கைப் பேரிடர்கள் வழக்கமான நிகழ்வாகிவிட்டன. இதன் தாக்கத்தைப் புரிந்துகொண்டு நாம் அனைவருமே கூட்டாகச் செயலாற்ற வேண்டியது மிக அவசியம்.
ஆபத்துகள் நிறைந்த கடினமான சூழ்நிலையில் தங்களது உயிரைப் பணயம் வைத்து மக்களை மீட்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள இராணுவத்தினருக்கும், அர்ப்பணிப்புடன் செயலாற்றும் மாநில அரசுகளின் ஊழியர்களுக்கும் எனது நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
மீட்புப் பணிகளைத் துரிதப்படுத்தும்படி மத்திய அரசை கேட்டுக்கொள்கிறேன்.
கேரள மாநிலம் வயநாடு பகுதியிலும், வால்பாறையிலும் நிலச்சரிவினால் ஏற்பட்ட பேரழிவுகள் என் நெஞ்சைப் பதற வைக்கின்றன. தங்களது அன்புக்குரியவர்களையும், வீடு வாசல், உடைமைகளையும் இழந்து தவிக்கும் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கல்கள்.
— Kamal Haasan (@ikamalhaasan) July 30, 2024
பருவநிலை மாற்றத்தின் காரணமாக இயற்கைப் பேரிடர்கள்…
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout