close
Choose your channels

அவரின்றி தமிழ்நாட்டில் அரசியல் அசைவுகள் இல்லை: கமல்ஹாசன்

Thursday, June 3, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

முன்னாள் தமிழக முதல்வர் மற்றும் முன்னாள் திமுக தலைவர் கருணாநிதி அவர்களின் 98 வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்பட்டு வரும் நிலையில் உலக நாயகன் கமல்ஹாசன் அவர்கள் ’அவர் இன்றி தமிழகத்தில் அரசியல் நகர்வுகள் இல்லை’ என்று கூறி டுவிட் ஒன்றை பதிவு செய்துள்ளார்.

முன்னாள் திமுக தலைவர், முன்னாள் முதலமைச்சர் மு கருணாநிதியின் பிறந்தநாளை திமுக தொண்டர்கள் சிறப்பாக கொண்டாடி வருகின்றனர். பத்தாண்டுகளுக்குப் பிறகு திமுக மீண்டும் ஆட்சியை பிடித்துள்ள நிலையில் முதல்வர் முக ஸ்டாலின் உள்பட திமுக பிரமுகர்கள் பலர் கருணாநிதியின் சமாதிக்கு சென்று மலர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்

இந்த நிலையில் கருணாநிதியின் பிறந்தநாள் குறித்து பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், திரையுலக பிரமுகர்கள் தங்களுடைய சமூக வலைதளப் பக்கங்களில் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் முன்னாள் முதல்வர் கருணாநிதியுடன் மிக நெருங்கிய நட்பு கொண்ட கமல்ஹாசன் அவர்கள் சற்று முன் தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது:

அறிஞர் அண்ணாவின் கொள்கையான மாநிலத் தனித்துவத்தை வடக்குவரை எதிரொலித்த ஆளுமை; தானின்றி தமிழ்நாட்டின் அரசியல் அசைவுகள் இல்லையென இறுதிவரை இருத்திக்காட்டியவர் கலைஞர் கருணாநிதி. அவர்தம் பிறந்த நாளின் அவரது உறுதிகொண்ட நெஞ்சை நினைவு கூர்வோம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment