ரஜினி உள்பட கன்னட நடிகர்கள் மீதான எனது பார்வை: கமல்ஹாசன்

  • IndiaGlitz, [Friday,April 06 2018]

ஒருபக்கம் கன்னட அரசுக்கு எதிராகவும், மத்திய அரசுக்கு எதிராகவும் காவிரி விஷயத்தில் ஒட்டுமொத்த தமிழர்களும் போராடி வரும் நிலையில் இன்னொரு பக்கம் கன்னடர் ஒருவரை அண்ணா பல்கலைக்கழகத்திற்கு துணைவேந்தராக நியமனம் செய்து தமிழர்களின் கொதிப்பை அதிகரித்து வருகின்றனர்.

இந்த நிலையில் நாங்கள் கர்நாடகத்திடம் இருந்து கேட்பது தண்ணீர் தான் என்றும், கன்னடர்கள் எங்களுக்கு எதிரி இல்லை என்றும் கூறிய கமல்ஹாசன், கன்னட நடிகரான நாகேஷ் எனது குருக்களில் ஒருவர் என்றும், ராஜ்குமார், சரோஜாதேவி மற்றும் எனது நண்பர் ரஜினிகாந்த், அம்ரீஷ் ஆகியோர் எனது நெருக்கத்துக்கு உரியவர்கள் என்றும் கூறியுள்ளார்.

கமல்ஹாசனின் இந்த டூவீட்டுக்கு ஆதரவும் எதிர்ப்பும் மாறி மாரி வருகிறது. குறிப்பாக ரஜினியை கன்னடர் என்று கமல் தெளிவாக கூறிவிட்டதாக ஒருசிலர் கமெண்ட் தெரிவித்து வருகின்றனர்.

More News

கேட்டது தண்ணீர், கிடைத்தது துணைவேந்தர்: நம்மை தூண்டி விடுகின்றார்களா? கமல்ஹாசன்

'கர்நாடகாவிடம் இருந்து நாம் கேட்டது தண்ணீர், ஆனால் பெற்றதோ துணைவேந்தர். எனவே மக்களுக்கும் அரசாங்கத்திற்கும் இடையே உள்ள பிளவு வெளிப்படையாக தெரிகிறது.

சல்மான்கான் வேட்டையாடி கருப்பு மானில் அப்படி என்ன விசேஷம்?

மனிதர்களை கொலை செய்த பலரே தண்டனையின்றி சுதந்திரமாக உலாவி வரும் நிலையில் மான்களை கொன்ற ஒருவருக்கு ஐந்து வருடங்கள் சிறையா? என்ற கேள்வி பலரது மனதில் எழுந்துள்ளது.

பைக் விபத்தில் பலியான 16 வயது சிறுவன்: பெற்றோர் மீது வழக்கு

18 வயதிற்குட்பட்டவர்கள் வாகனம் ஓட்ட தடை என காவல்துறை எச்சரித்து வந்தும், சிறுவர்கள் பைக் ஓட்டுவதால் ஏற்படும் உயிரிழப்பு அதிகரித்து வருவதாக சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

'காலா'வை குறிவைத்து காய் நகர்த்தும் கார்ப்பரேட் நிறுவனங்கள்

ஏப்ரல் 27ஆம் தேதி இந்த படம் ரிலீஸ் உறுதியில்லை என்பதால் இந்த படத்தின் வியாபாரமும் இன்னும் தொடங்கப்படவில்லை. ஆனால் அதே நேரத்தில் காலாவை குறிவைத்து கார்ப்பரேட் நிறுவனங்கள் காய் நகர்த்த தொடங்கிவிட்டன.

காமன்வெல்த் போட்டி: 2வது தங்கமங்கைக்கு சேவாக் வாழ்த்து

காமன்வெல்த் போட்டியின் முதல் நாளில் இந்தியாவின் மீராபாய் முதல் தங்கத்தையும், குருராஜா முதல் வெள்ளி பதக்கத்தையும் பெற்று தந்த நிலையில் இன்று இந்தியாவுக்க்கு இரண்டாவது தங்கம் கிடைத்துள்ளது.